பள்ளிகள் இயங்காது..ஸ்ட்ரைக் செய்யும் தனியார் பள்ளிகள் சங்கம்! சாட்டையை சுழற்றிய அரசு! பறந்த உத்தரவு!
சென்னை : கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடர்பாக நாளை ஒரு நாள் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அங்கு வன்முறை வெடித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் பள்ளியில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் வாகனத்தை தீயிட்டு எரித்தனர்.
இதுமட்டும் இன்றி பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினரையும் கல்வீச்சு தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாணவி உயிரிழப்பு
காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவி உயிரிழப்பு தொடர்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், அதே நேரத்தில் பள்ளியை பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் சேதப்படுத்தியதை ஏற்று கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள்
இந்நிலையில்,"இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெற்றோர்கள் என்ற போர்வையில் சமூக விரோத கும்பல் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த பள்ளியில் பயிலும் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பள்ளிகள் இயங்காது
எனவே, பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்று நிகழாத வகையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இதனால் நாளை ஒரு நாள் முழுவதும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது" என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

பள்ளிகள் செயல்படும்
இதனிடையே,"விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. எனவே, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் மாவட்டத்தில் நாளை அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், தனியார் சுயநிதி பள்ளிகள், மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி மற்றும் அனைத்து தனியார்ப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications