பாலியல் வழக்கு: போக்சோவில் கைதான பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் புழல் சிறையில் அடைப்பு
ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பிஎஸ்பிபி ஆசிரியர் ராஜகோபால் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை: பத்மா சேஷாத்திரி பாலபவன் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபல் போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டில் ராஜகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடத்திய நீதிபதி ஜூன் 8ஆம் தேதிவரை புழல் சிறையில் ராஜகோபாலை அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னையில் உள்ள புகழ்பெற்ற பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு படித்த முன்னாள் மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை அடுக்கினர்.
ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

மகளிர் காவலர்கள் விசாரணை
இந்த புகாரின் பேரில் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்த ஆசிரியர் ராஜகோபல் வீட்டுக்குச் சென்று அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மடிப்பாக்கத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ராஜகோபாலிடம் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை
இதனையடுத்து காவல்துறையினர் நேற்று மாலை 4 மணியில் இருந்து ராஜகோபாலனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜகோபாலன் பல முக்கியமான தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

ஆசிரியர் ராஜகோபால் கைது
இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபலனிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை நேற்றிரவு கைது செய்தனர். அவரிடம் விடிய விடிய காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர் .காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
பள்ளியின் மேலும் சில ஆசிரியர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக ராஜகோபால் வாக்குமூலம் அளித்துள்ளார். அசோக் நகர் மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் ராஜகோபலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில் நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
இதனிடையே ஆசிரியர் ராஜகோபால் எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது வீட்டிற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராஜகோபால் அளித்த வாக்குமூலத்தையும் தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிபதி முகமது பரூக் ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

புழல் சிறை
நீதிபதியின் உத்தரவை அடுத்து பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிரபல பள்ளியின் ஆசிரியர் பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications