சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு பணியாளர்களுக்கு "இது" முக்கியம்.. அவங்க வேணும்னா கோர்ட்டுக்கு போகட்டும்: நிதியமைச்சர் பி.டி.ஆர்

நிதியமைச்சர் பிடிஆர் தமிழ் மொழி கட்டாயம் ஏன் என்பது குறித்து விளக்கம் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அரசு பணியாளர்களுக்கு தமிழ்ப் புலமை இருப்பது அவசியம் என்றும், போட்டித் தேர்வுக்கெனத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதாகவும், நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது.. அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தாளை கட்டாயமாக்கி அந்த அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன... இந்நிலையில், அரசாணை குறித்து நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொன்னதாவது:

மதுரை மாநகராட்சி சாலை சீரமைப்புக்கு சிறப்பு நிதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குட் நியூஸ்!மதுரை மாநகராட்சி சாலை சீரமைப்புக்கு சிறப்பு நிதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குட் நியூஸ்!

நடவடிக்கை

நடவடிக்கை

"முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, துறை ரீதியாகப் பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன... அதன்படி, நிதி நிலை அறிக்கை ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டபோது, மனித வள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றபோது, போட்டி தேர்வில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.. இதற்கு இணங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..

 பிற மாநிலம்

பிற மாநிலம்

மாநில அரசின் எந்த தேர்வு எழுதினாலும், அடிப்படை தமிழ் தாள் கட்டாயம் எழுத வேண்டும். அதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் கட்டாயம் வாங்க வேண்டும். அப்போது தான் அடுத்த சுற்றிற்கு தகுதி பெற முடியும்... அரசு பள்ளியில் படித்து வர கூடிய மாணவர்கள் அதிகம் பயன்படுவார்கள்... இனி நடக்க கூடிய தேர்வுகளுக்கு இப்போதைய அரசாணை பொருந்தும். .. மின்துறையில் வெளி மாநிலத்தை சேர்ந்தோருக்கு வேலை கிடைத்ததாக தகவல்வந்தது... இதையும் தடுக்கும் விதமாகத்தான் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

அரசாரணை

அரசாரணை

அதாவது தமிழ் மொழி அறியாத பிற மாநில பணியாளர்கள் பலர் முறையாக பிரித்து பணியில் அமர்த்தப்படவில்லை. அதனை திருத்தும் வகையில்தான் இந்த அரசாணை அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் வெளி மாநில பணியாளர்கள் காரணமாக நிர்வாகத்தில் பல தவறுகளும் குளறுபடிகளும் ஏற்பட்டன.. இதனைக் களைவதற்காக அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியம்.

 கட்டாய மொழி

கட்டாய மொழி

தமிழக அரசின் பணியில் 15 லட்சம் காலியிடங்கள் உள்ளன... இப்போதைக்கு 9 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர்... அரசு பணிகளில் சராசரியாக 35 சதவீதம் காலியிடங்கள் இருந்துள்ளது... அரசின் பணியிடங்களை நிரப்ப 70 முதல் 80 தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. தமிழகத்தின் கல்வி திட்டம் தான் நாட்டிலேயே சிறந்த கல்வி திட்டமாக திகழ்கிறது. கொரோனாவிற்கு முன்பு 90% மாணவர்கள் மேல்நிலை பள்ளி முடித்தார்கள். கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிப்பவருக்கு தமிழ் மொழி கட்டாயம் என்பதால் வாய்ப்பு அதிகரிக்கும். சமூக நீதி நிலைநாட்டப்படும்.

 முனைவர் பட்டம்

முனைவர் பட்டம்

முனைவர் பட்டம் தகுதி அளவிற்கு தமிழ் தெரிய வேண்டும் என்று சொல்லவில்லை.. ஆனால், அடிப்படை தமிழ் அறிவுக்காக தான் இதனை முன்வைக்கிறோம்.. 10ம் வகுப்பு தமிழ் பாடம் அளவிற்கு அறிந்திருந்தால் போதும்.. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற ரீதியில்தான் செயல்படுகிறோம்... அனைத்து சமூதாயத்தில் இருந்தும், முக்கியமாக, கிராமங்களில் இருந்து அரசு பணியில் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

மொழித்தேர்வு

மொழித்தேர்வு

போட்டி தேர்வுக்கெனத் தங்களை தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் தாகம் புரிந்ததாலேயே தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது... அவர்களின் கவலைகளைப் போக்க இதுதான் தக்க சமயம் என்பதை தமிழக அரசும் உணர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.. ஒருவேளை, ஆங்கில வழி படித்தவர்களுக்கு இது பிடிக்கவில்லை என்றால், அவர்கள் கோர்ட்டுக்கு போகட்டும்.. எந்த ஒரு தேர்வும் மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது என்பதே அடிப்படை.. அதனால் தான் நீட் தேர்வை தொடர்ந்து இப்போது வரை எதிர்த்து வருகிறோம்.. இங்கு யார் யார் தமிழர் என்பதை அடையாளப்படுத்த முடியாது. ஆனால் தமிழ் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.

English summary
PTR Palanivel Thiagarajan explains why tamil compulsory in government service examination
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X