சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வசதி படைத்தவரா நீங்கள்? ரேஷனில் பொருள் வாங்குறீங்களா? அமைச்சர் சக்கரபாணி போட்ட முக்கிய உத்தரவு!

Google Oneindia Tamil News

சென்னை: வசதி படைத்த நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    வசதி படைத்தவரா நீங்கள்? ரேஷனில் பொருள் வாங்குறீங்களா? அமைச்சர் சக்கரபாணி போட்ட முக்கிய உத்தரவு!

    உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுவிநியோக திட்ட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளுக்கு பறக்கும் மிக முக்கிய உத்தரவு.. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு! ரேஷன் கடைகளுக்கு பறக்கும் மிக முக்கிய உத்தரவு.. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழ்நாடு அரசு!

    வசதி படைத்தோர்

    வசதி படைத்தோர்

    தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 2.22 கோடி அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் விநியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் மேலெழுந்து வருகின்றன. இது தொடர்பாக ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்பட்டாலும் இந்த பிரச்னை ஓய்ந்தபாடாக இருப்பதில்லை. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் வசதிபடைத்தவர்கள் இந்த பொருட்களை வாங்காமல் இருப்பதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரவு

    உத்தரவு

    இந்த சூழலில், அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் பொதுவிநியோக திட்ட அலுவலர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இதில் வசதி படைத்த நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்னர், ரேஷன் கடைகளில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கவும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் இந்த சீரமைப்பு பணிகளை செப்.15ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இதனைத் தொடர்ந்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது.

    சேதமடைந்த கட்டடங்கள்

    சேதமடைந்த கட்டடங்கள்

    பழைய உத்தரவில், தமிழ்நாட்டில் உள்ள பல ரேஷன் கடைகளில் சுவர் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. அவற்றை, வரும் மழை காலத்திற்கு முன் சீரமைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டிருந்தது. பலர், இந்த பணியில் அலட்சியம் காட்டுவதாகவும், கண் துடைப்பிற்காக செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சீரமைக்க முடியாத கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளை, நல்ல நிலையில் உள்ள வேறு கட்டடங்களுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். சேதமடைந்த கடைகளில் சீரமைப்பு பணிகளை, முறையாக மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை, செப்., 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதிரடி மாற்றம்

    அதிரடி மாற்றம்

    சமீப நாட்களாகவே ரேஷன் கடைகள் தொடர்பான அறிவிப்புகள் வந்தவண்ணமுள்ளன. சில அதிரடி மாற்றங்களும் இந்த துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. கடைகளை சுத்தமாக வைத்திருப்பது, அரிசி, பருப்பு என கீழே இரைந்து கிடக்கும் இவற்றை மக்களுக்கு விநியோகிக்கக்கூடாது என முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. மேலும், "தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள் விரைவில் அதிகம் தொடங்கப்படும். 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாக தாங்கள் விளைவித்த அரிசியை கொண்டு சேர்க்க முடியும். அதேபோல் ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும்" என அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து வரும் ரேஷன் கடைகள் குறித்த உத்தரவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    English summary
    The Food Department has directed that the affluent persons should investigate and submit a report on whether they are buying products from ration
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X