சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜனநாயக துரோகம்"... பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்த நாராயணசாமி.. வீடியோ போட்டு தாக்கு..!

நாராயணசாமி வீடியோ வெளியிட்டு மத்திய அரசை சாடியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "இது ஜனநாயக துரோகம்... பெகாசஸ் மென்பொருள் வாங்கியது யார், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்" என்று நாராயணசாமி ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    Pegasus உளவு விவகாரம்.. Parliament வளாகத்தில் Tamil-ல் கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சிகள்

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் பேசியுள்ளதன் சுருக்கம் இதுதான்:

     தமிழகத்தில் 1800க்கு கீழ் தினசரி வைரஸ் பாதிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் 100ஐ தாண்டிய கொரோனா தமிழகத்தில் 1800க்கு கீழ் தினசரி வைரஸ் பாதிப்பு.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் 100ஐ தாண்டிய கொரோனா

    "இப்போது நமது நாட்டில் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் ஏராளமானோர் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டுள்ளது.. இது மிகப்பெரிய ஊழல்..

     ஆட்சி கவிழ்ப்பு

    ஆட்சி கவிழ்ப்பு

    இதை பல வருடங்களாக ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்தியில் உள்ள மோடி அரசு பயன்படுத்தி வருகிறது.. பலரது ரகசியங்களை தெரிந்துகொள்ளவும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது..
    தனியார் நிறுவனத்திற்கு இந்த மென்பொருளை கொடுக்கமாட்டோம் என்றும், ஒரு அரசு கேட்டால் மட்டுமே கொடுப்போம் என்றும் இஸ்ரேல் நிறுவனம் சொல்கிறது..

     எதிர்கட்சிகள்

    எதிர்கட்சிகள்

    அப்படியானால், இதிலிருந்து இந்திய நாட்டில் மோடி அரசானது மிகப்பெரிய விலையை கொடுத்து அந்த மென்பொருளை வாங்கி, செல்போனையும் ஒட்டுகேட்டுள்ளது.. நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்ற நிலை குழு வைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.. ஆனால், அதற்கு மோடி அரசு செவிசாய்க்கவில்லை..

     மென்பொருள்

    மென்பொருள்

    மத்திய அரசு தவறு செய்த காரணத்தால்தான், உளவுபார்த்த காரணத்தால்தான் அந்த விசாரணைக்கு மோடி அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஜனநாயக துரோகம். பெகாசஸ் மென்பொருள் வாங்கியது யார், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்..

     தனி வார்டு

    தனி வார்டு

    விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. மோடி அரசு அந்த சட்டங்களை இன்னமும் திரும்ப பெறமால் உள்ளது.. இனியாவது 3 விவசாய விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.. கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.. குழந்தைகளுக்காகவே தனியாக வார்டு அமைக்க வேண்டும்" என்றார்.

    English summary
    Puducherry Ex CM Narayanasamys video and says about Pegasus tapping phone conversation matter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X