மீண்டும் வந்த சிபிஐ இயக்குனர்.. தூசு தட்டப்படும் ரபேல் பேரம்.. விசாரணைக்கு உத்தரவிடுவாரா?
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்குகிறார்.
கடந்த இரண்டு மாதமாக நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் தனது பணியை தொடங்கி உள்ளார்.

3 மாதம் முன் என்ன நடந்தது
கடந்த அக்டோபர் மாதமே சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா, ரபேல் ஊழல் குறித்து விசாரிக்க மிகவும் தீவிரம் காட்டினார். அப்போது இதுகுறித்து அலோக் வெர்மா இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை குறித்த ஆவணங்களை ஏற்கனவே வாங்கி இருந்தார். அதன்பின்தான் இவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

ஆதாரங்களை திரட்டினார்
மேலும் ரபேல் ஊழலில் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மனுதாரர்கள் அளித்த ஆதாரங்களையும் திரட்டி விசாரிக்க முடிவு செய்து இருந்தார். இதற்காக தனி விசாரணை அணியை உருவாக்கும் திட்டத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர் விடுமுறையில் இருக்கும் போதே இந்த வழக்கு முடிவிற்கு வந்துவிட்டது.

ஆவணம் கேட்டார்
கடந்த அக்டோபர் மாதம் இவர் பிரதமர் மோடியிடமும், மத்திய அரசிடமும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை கேட்டு இருந்தார். இவர் ரபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை கேட்டது எல்லோருக்கும் தெரியும். இந்த ஆவணங்களை இதுவரை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பார்த்து இருக்கிறார்கள். அதோடு ஒப்பந்தம் செய்த அனில் அம்பானி பார்த்து இருக்கிறார். அதைத்தான் இவர் விசாரிக்க எண்ணி கேட்டார்.

நடக்குமா
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் இவர் காலவரையற்ற கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்று மோடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் மீண்டும் ரபேல் விவகாரத்தை கையில் எடுப்பாரா என்ற கேள்வியை எழுந்துள்ளது.

வாய்ப்பு
முக்கியமாக, இந்த ரபேல் விவகாரத்தை விசாரிப்பது கொள்கை முடிவு கிடையாது. அதனால் ரபேல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட அலோக் வெர்மாவிற்கு முழு தகுதி உள்ளது. ஆனால் இவரின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் முடிவதால், இவர் ரபேல் குறித்து நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications