சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க வந்தா நாங்க வரோம்.. இப்ப இல்லன்னா வேற எப்போ.. ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் வேட்பாளராக தான் நிற்பதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்த முடிவை அவர் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ராகவா லாரன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், தலைவர் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கடந்த வாரம் நான் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டேன்.

அதில் எனது நண்பர்களும் மீடியா நண்பர்களும், அனைத்து கட்சிகளும் உங்களுக்கு உதவுவதாகவும் அனைவரையும் நீங்கள் மதிப்பதாகவும் கூறுகிறீர்கள். அதே வேளையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரைத்தான் ஆதரிப்பேன் என்று கூறுகிறீர்களே என கேட்டார்கள்.

போஸ்டர் அடிக்க கூடாது என்று சொன்ன ரஜினி... அதையும் போஸ்டராக ஒட்டிய மதுரை ரசிகர்கள் போஸ்டர் அடிக்க கூடாது என்று சொன்ன ரஜினி... அதையும் போஸ்டராக ஒட்டிய மதுரை ரசிகர்கள்

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

மேலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரையோ நீங்கள் ஆதரிப்பீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்விகளுக்கு நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் நிற்க வேண்டும் என விரும்புகிறேன்.

ட்விட்

ட்விட்

ஆனால் லீலா பேலஸில் முதல்வர் வேட்பாளராக தான் நிற்க மாட்டேன் என அவர் தனது முடிவை அறிவித்தார். அப்போது அவரது முடிவுக்கு ஆதரவாக நான் ட்விட் போட்டேன். தலைவருக்கு எதிராக நான் பேசக் கூடாது என்பதால் அவ்வாறு செய்தேன். ஆனால் முழு மனதுடன் அதை நான் ஏற்கவில்லை. நான் மட்டுமல்ல, அவரது அனைத்து ரசிகர்களும் அப்படித்தான் நினைப்பார்கள் என நினைக்கிறேன்.

மறுபரிசீலனை

மறுபரிசீலனை

நான் ஒவ்வொரு வாரமும் ரஜினிகாந்த் குறித்து பேசும் போதெல்லாம் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனவே தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் அவருக்காக நான் பணியாற்ற தயாராக உள்ளேன். மற்றவர்களுக்காக நான் பணியாற்ற விரும்பவில்லை. ரஜினியை சமாதானப்படுத்த நான் தொடர்ந்து முயற்சிப்பேன்.

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

அப்படி இல்லாவிட்டால் நான் எனது மக்கள் சேவையை தொடர்ந்து செய்த வண்ணம் இருப்பேன். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் நிற்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். வருங்காலத்தில் வேண்டுமானால் அவர் விரும்பினால் வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக நிற்க வைத்து கொள்ளட்டும். ஆனால் இந்த முறை அவர் தான் நிற்க வேண்டும். அனைத்து ரசிகர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது. ரசிகர்களும் இதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். நீங்க வந்தா நாங்க வரோம்... இப்போ இல்லனா வேற எப்போ.. நவம்பர்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Actor Raghava Lawrence demands Rajinikanth to reconsider his decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X