சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..இந்த 6 மாவட்ட மக்களுக்கு குடை அவசியம்

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானில் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Rain with thunder and lightning umbrella is necessary for the people of these 6 districts

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர் மாவட்டங்களில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.

 இன்று கொட்டப்போகுது கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா இன்று கொட்டப்போகுது கனமழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. எங்கெல்லாம் பள்ளிக்கு லீவ் தெரியுமா

இதனிடையே இன்றைய தினம் அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த பின்னர் தை மாதத்தில் பருவம் தவறி பெய்து வரும் மழை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிவிட வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிவிடலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

English summary
The Chennai Meteorological Department has informed that moderate rain with thunder and lightning is likely to occur in 6 districts of Tamil Nadu namely Chengalpattu, Kanchipuram, Chennai, Tiruvallur, KanniyaKumari and Tirunelvely in the next 3 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X