சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்பரப்பி கலவரம் பற்றிய கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்ன பதில்.. வெடித்த சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம் - ரஜினிகாந்த் அறிவிப்பு-வீடியோ

    சென்னை: ஜாதிய மோதல் விவகாரத்தை நடிகர் ரஜினிகாந்த் எளிதாக கடந்து சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது தனது அரசியல் வருகை குறித்து அவர் கருத்து தெரிவித்தார். சட்டசபை தேர்தல் காலத்தில் தான் களமிறங்கப்போவதாக அப்போது அவர் கூறினார்.

    அப்போதுதான், சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் அருகே பொன்பரப்பி பகுதியில் நடைபெற்ற இருபிரிவினர் நடுவேயான மோதல் சம்பவம் குறித்து, ரஜினிகாந்த்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள் 2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள்

    சமூக வலைத்தளங்கள்

    சமூக வலைத்தளங்கள்

    இதற்கு ரஜினிகாந்த் சிம்பிளாக ஒரு பதிலை சொன்னார். முன்பு இதற்கும் மேல் வன்முறைகள் நடந்துள்ளன. இதெல்லாம் குறைவு. இம்முறை நன்றாகத்தான் தேர்தலை நடத்தியுள்ளார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் ரஜினிகாந்த். கலவரத்திற்கு கண்டனம் தெரிவிக்கால், இப்போ பரவாயில்லை என ரஜினிகாந்த் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

    அசத்துற மாதிரி பதில்

    கேள்வி:தேர்தலின் போது அரியலூர் உட்பட சில இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன இன்னும் முறையான தேர்தல் நடப்பதில்லையா? ரஜினி:முன்பு நடந்ததை விட குறைவு இம்முறை தேர்தல் நன்றாக நடந்துள்ளது //நாம ஒரு கேள்வி கேட்ட நம்மல அசத்தற மாதிரி ஒரு பதில் சொல்லுவாப்ல பாருங்க அது யாருக்கும் புரியாது😂

    நோ கமெண்ட்ஸ்

    அரியலூரில் சமூகம் சார்ந்த வன்முறை நடந்துள்ளது குறித்து உங்கள் கருத்து?

    ரஜினிகாந்த் பதில்: இதற்கு முன்பு நடந்த தேர்தலில் வன்முறைகளை விட இந்த முறை வன்முறை குறைவாகவே நடந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறது..

    No comments ..😡😡😡

    ரஞ்சித் கண்டனம்

    அதேநேரம், ரஜினிகாந்த்தை வைத்து அடுத்தடுத்து, கபாலி, காலா என திரைப்படங்களை இயக்கிய, ரஞ்சித், இந்த கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ட்வீட்டரில் அவர் கூறியுள்ளதாவது: சுதந்திரத்தை நேசிக்கிறவனும், எதையும் எதிர்பார்க்காதவனும், எதற்கும் அஞ்சாதவனும், எதையும் கேட்காதவனும், அறிவுலகில் உண்மையைப் பேணி வளர்ப்பதன்றி வேறு எதற்கும் ஆசைப்படாதவனுமாகிய ஒருவனை (சமூகத்தை)இந்த சின்னஞ்சிறிய அற்பமான தாக்குதல்கள் ஊக்கமிழக்கச் செய்திடலாகாது,

    English summary
    Rajinikanth didn't given proper reply to the election violence related question.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X