அனைத்து தரப்பினருக்காகவும் போராடியவர் தேவர்! எந்நாளும் மக்கள் மனங்களில் வாழ்வார்! ராமதாஸ் புகழாரம்!
சென்னை: அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடியவர் முத்துராமலிங்கத் தேவர் என்றும் அவர் எந்நாளும் மக்கள் மனங்களில் வாழ்வார் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம் தெரிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115வது பிறந்தநாளான இன்று ராமதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

அரசியல் பொதுவாழ்வு
''அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் சாதனைகளை படைத்த பசும்பொன் பெருமகனார் அவர்களின் 115-ஆவது பிறந்தநாளும், 60-ஆவது குருபூசையும் கொண்டாடப்படும் இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் அவரது பங்கு ஈடு இணையற்றது!''

நிலம் வழங்கினார்
''தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என பொதுவாழ்க்கையில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம்!''

மக்கள் மனங்களில்
''அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அவரின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு காரணம். தேவர் பெருமகனார் ஆற்றிய பணிகளின் மூலம் அவர் எந்த நாளும் மக்களின் மனங்களில் வாழ்வார் என்பது உறுதி.'' இவ்வாறு ராமதாஸ் கூறியிருக்கிறார்.

பாமக சார்பில்
இதனிடையே சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு பாமக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராமதாஸை போல் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முத்துராமலிங்கத் தேவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் ஆற்றிய சாதனைகளை பட்டியலிட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications