சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என் மூச்சு உள்ள போதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்.. நா தழுத்து கலங்கிய ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: என் மூச்சு உள்ள போதே கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும் என உணர்ச்சி பொங்க ராமதாஸ் கலங்கியவாறு பேசினார்.

இனி நமது தலைமையில்தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாமக சிறப்பு பொதுக் கூட்டம் ஆன்லைன் மூலமாக நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தமிவகம்- புதுவையை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து அடம்- ரஷ்யாவில் 1,000-த்தை தாண்டிய ஒருநாள் கொரோனா மரணங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து அடம்- ரஷ்யாவில் 1,000-த்தை தாண்டிய ஒருநாள் கொரோனா மரணங்கள்

தேர்தல் முடிவு

தேர்தல் முடிவு

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா? இப்போது அந்த பலவெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே?

துரோகம்

துரோகம்

இனி ஆதாயத்திற்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சி விட்டு கட்சி தாவுவோர் இப்போதே சென்றுவிடுங்கள். கட்சியில் இருந்து கொண்டே யாரும் துரோகம் செய்யாதீர்கள், இனி போட்டி, பொறாமை இருக்கக் கூடாது. இனி கட்சிக்கு என ஒரு உளவுப் படை வைக்க போகிறோம். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பல நேரங்களில் நாம் உதவியிருக்கிறோம்.

கடைசி நேரம்

கடைசி நேரம்

ஒரு கட்சி நம்மை களங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி உண்மையாக இருந்திருக்கிறோம். இனி நமது தலைமையில்தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. கடைசி நேரத்தில் முடிவு மாறும் நிலை இனி இருக்காது. இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

செயல்திட்டங்கள்

செயல்திட்டங்கள்


வீடு வீடாக சென்று பா.ம.க.வின் பெருமைகளை, செயல்திட்டங்களை சொல்லுங்கள். தீபாவளிக்கு பிறகு பா.ம.க. நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மாற்றத்தை ஏற்பார்கள். என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும் என நா தழுதழுக்க ராமதாஸ் சொன்னார்.

English summary
PMK Ramadoss says that Anbumani should make CM before his last breathe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X