சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைந்தது
கொரோனா பரிசோதனை கட்டணத்தை மீண்டும் குறைத்து சென்னை விமான நிலையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.ரேபிட் பிசிஆர் பரிசோதனை ரூ3,400லிருந்து 500ரூபாய் குறைத்து ரூ.2,900 ஆகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 700 ரூபாயில் இருந்து ரூ.600 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் பரவி வருகிறது.
இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்காளதேசம், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பன்னாட்டு விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வரும் வரை விமான நிலைய வளாகத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.
அத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர், ரேபிட் பிசிஆர் பரிசோதனை செய்ய தனியாக இடவசதி செய்யப்பட்டு உள்ளது.

பரிசோதனைக் கட்டணம்
500 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு, உணவு வசதியும் செய்யப்பட்டு உள்ளன. ரூ.700 கட்டணத்தில் செய்யப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவு வர 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ரூ.3,400 கட்டணத்தில் 45 நிமிடங்களுக்குள் முடிவு வரக்கூடிய ரேபிட் பிசிஆர் பரிசோதனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

800 பேர் வரை பரிசோதனை
இந்த பரிசோதனைக்கு பயணிகள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்க ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 800 பேர் வரை பரிசோதனை செய்யும் வகையில் கூடுதல் கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இலவச தொலைபேசி வசதியுடன், இலவச வைபை வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு நியாயமான விலையில் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விமான நிலைய ஆணையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கு முன்னுரிமை
வெளிநாடுகளில் இருந்து வந்து ரேபிட் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளும் பயணிகள், சென்னையில் இருந்து இணைப்பு விமானம் மூலம் வேறு நகரங்களுக்கு செல்வதாக இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு 20 முதல் 30 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும் எனவும் பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவிகிதம் பேருக்கு இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும். மேலும் விமான பயணிகளை ஸ்கிரீனிங் கருவி மூலமும் கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

ரூ.500 குறைப்பு
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் ரேபிட் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,400, ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ரூ.700 கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். ரேபிட் பிசிஆர் பரிசோதனை ரூ3,400லிருந்து 500ரூபாய் குறைத்து ரூ.2,900, ஆர்டிபிசிஆர் பரிசோதனை க்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் ரூபாய்100 குறைத்து ரூ.600 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் இந்த நடைமுறை விமான நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications