சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏடிஎம்களில் பணம் எடுத்தால்.. ரூ.21 பிடித்தம்.. ஆர்பிஐ வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை :இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இனிமேல் உங்களின் இலவச பரிவர்த்தனை வரம்பு தாண்டிய உடன் வங்கிகள், உங்களிடம் கட்டணம் வசூலிக்க முடியும்.

ரிசர்வ் வங்கி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்ச கட்டணங்கள் ரூ .20 என்பதில் 21 ஆக உயர்த்தப்படும். புதிய கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது,

வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தினால், மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. பரிவர்த்தனைகளை செய்ய மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன, மெட்ரோ அல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஐந்து முறை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதுவே தற்போது உள்ள நடைமுறை ஆகும்.

இன்று முதல்.. ஏடிஎம் பயன்படுத்தினால் தனி கட்டணம் செலுத்தணுமா.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்புஇன்று முதல்.. ஏடிஎம் பயன்படுத்தினால் தனி கட்டணம் செலுத்தணுமா.. இணையத்தில் பரவும் தகவலால் பரபரப்பு

பரிந்துரை செய்தது

பரிந்துரை செய்தது

இந்நிலையில் 2019 இல், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையிலான குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் அவற்றில் நடத்தப்பட்ட பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்பட்ட கட்டணங்களின் முழு வரம்பு குறித்த பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அந்த நேரத்தில் குழு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .24 கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்தது.

உயரும் கட்டணம்

உயரும் கட்டணம்

இதன்படி திருத்தப்பட்ட கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் பரிமாற்றக் கட்டணமாக அதிகமாக செலுத்த வேண்டிய வங்கிகளுக்கு ஈடுசெய்யும் பொருட்டு. நிதி பரிவர்த்தனைக்கு பரிமாற்றக் கட்டணம் இப்போது ரூ .15 முதல் ரூ .17 ஆக உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. நிதி அல்லாத பரிவர்த்தனைகளில், பரிமாற்ற கட்டணம் தற்போது ரூ .5 முதல் ரூ .6 ஆக திருத்தப்பட உள்ளது.

ஏடிஎம் அமைப்பாளர்கள்

ஏடிஎம் அமைப்பாளர்கள்

ஏடிஎம் தொழில் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை வரவேறுள்ளார்., அவர் கூறும் போது " இந்த அறிவிப்பு. சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஏடிஎம்களின் எண்க்கை கணிசமாக அதிகரிக்க வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்களை (வெள்ளை ஏடிஎம்) ஊக்குவிக்கும், இதன் மூலம் ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசுக்கு நிதிகள் கணிசமாக உயரும் என்று கூறினார்.

சேவை அதிகரிக்கும்

சேவை அதிகரிக்கும்

யூரோநெட் வேர்ல்டுவைட்டில் இந்தியா மற்றும் தெற்காசியாவின் நாட்டு மேலாளர் பிரணய் ஜாவேரி கூறுகையில், பணம் மற்றும் டிஜிட்டல் அலவன்இரண்டுமே பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஆதரிக்கும் முக்கியமான தூண்கள். இந்த நடவடிக்கை நிச்சயமாக இந்தியா முழுவதும் ஏடிஎம்களை நிறுத்துவதற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். ஏடிஎம்களை மேம்படுத்த உதவும்." என்று கூறியுள்ளார்.

எவ்வளவு உயர்வு

எவ்வளவு உயர்வு

வங்கி ஒழுங்குமுறை கடைசியாக ஆகஸ்ட் 2012 இல் திருத்தப்பட்டது, அந்த பரிந்துரைகளின் படி வாடிக்கையாளர் கட்டணங்கள் ஆகஸ்ட் 2014 இல் திருத்தப்பட்டது .
ஏடிஎம் அமைப்பாளர்கள் மற்றும் வங்கிகள் மற்றும் சிறிய வங்கி ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு ஏற்படும் ஏடிஎம் பராமரிப்பிற்கான செலவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.21 வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

English summary
RBI allowed banks to raise charges on automated teller machines to Rs 21 per transaction. Banks can levy charges on customers within this ceiling, once they exhaust the free transaction limit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X