Vijayakanth.. கேப்டனுக்கு உடல் உறுப்புகளை நான் தருகிறேன்.. குவைத்தில் கண்ணீருடன் தொண்டர் வீடியோ
சென்னை: கேப்டனுக்காக என்ன வேண்டும்னாலும் செய்ய தயாராக உள்ளேன்.. அவருக்கு வேண்டிய உடல் உறுப்புகளை நான் எப்போது கேட்டாலும் உடனே வந்து தருகிறேன் என்று குவைத்திலிருந்து கண்ணீருடன் தேமுதிக தொண்டர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருடைய உடல் சிகிச்சையை ஏற்றுக் கொள்கிறது என மியாட் மருத்துவமனை கூறியிருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு கோயில்களில் கேப்டன் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனைகளை செய்கிறார்கள். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக சிலரும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சிலரும் கூறி வருகிறார்கள்.
”கேப்டனுக்காக என்ன வேண்டும்னாலும் செய்வேன்”.. உடல் உறுப்புகளைநான் தருகிறேன் - குவைத்திலிருந்து கண்ணீருடன் தேமுதிக தொண்டர் வீடியோ #DMDK | #Vijayakanth | #PremalathaVijayakanth pic.twitter.com/bbomjY3K77
— velmurugan (@velmurugantheni) December 2, 2023
அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்தவர் குவைத்திலிருந்து விஜயகாந்திற்காக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், தற்போது விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்று நியூஸ் பார்த்தேன்.. நான் குவைத்தில் இருக்கிறேன். நுரையீரல் சிகிச்சை பெற்று வருகிறார் என்று சொல்கிறார்கள்.. என் தலைவனுக்கு ஏதாவது உறுப்புகள் தேவைப்பட்டால், அதை மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், கல்லீரல், நுரையீரல், என எந்த ஒரு உறுப்புகளாக இருந்தாலும் நான் தருவதற்கு தயாராக உள்ளேன்..
நான் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உன்ஜினி கிராமத்தைச் சேர்ந்தவன்.. குவைத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு ஏதோவது தேவைப்பட்டால் நான் இங்கிருந்து உடனடியாக வருகிறேன்.. உடனே அண்ணியார் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.. நான் மனப்பூர்வமாக தருகிறேன்.. வாழ்கதேமுதிக.. வாழ்க விஜயகாந்த்.. நீங்கள் யார் வேண்டுமானாலும் என்னுடைய நம்பருக்கு கூப்பிடுங்க.. நான் உடல் உறுப்புகளை விஜயகாந்திற்காக தருவதற்கு தயாராக உள்ளேன். முழு சம்மதத்துடன் இதை சொல்கிறேன். யார் சொல்லியும் இப்படி பேசவில்லை.. தேமுதிக தொண்டர்கள் இந்த உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. " இவ்வாறு கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications