சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம மூவ்.. தமிழகத்தில் திடீரென மாற்றப்பட்ட 1018 பகுதிகளின் பெயர்கள்.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் 1,018 பகுதிகளின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றபடி ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 1,018 பகுதிகளின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றபடி ஆங்கிலத்தில் மாற்றப்பட்டது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 1,018 பகுதிகளின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புபடி ஆங்கிலத்திலும் அமையுமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பகுதிகளின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணை பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இப்படி பெயர்களை மாற்ற என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது.

 "ஒருவேளை, numerology யா இருக்குமோ?.. ஏன் இப்பிடி குழப்பிட்டு"... மனதில் பட்டதை போட்டுடைத்த கஸ்தூரி!

முன்பே திட்டமிட்டனர்

முன்பே திட்டமிட்டனர்

அதன்படி இந்த பெயர் மாற்ற திட்டம் இப்போது திடீர் என்று வரவில்லை. பல மாதங்களாக திட்டமிட்டு, அதன்பின்தான் பெயர் மாற்றங்களை அறிவித்து இருக்கிறார்கள். இதற்காக முன்பே மாவட்ட ஆட்சியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதேபோல் ஆசிரியர்கள், வல்லுனர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள் என்று முக்கிய குழுவிடம் இதற்காக கருத்து கேட்கப்பட்டது.

சென்னையில் சில ஆங்கில பெயர்களை மாற்ற திட்டம்

சென்னையில் சில ஆங்கில பெயர்களை மாற்ற திட்டம்

இதன் பின்பே பெயர்களை மாற்றும் முடிவிற்கு வந்துள்ளனர். அதிலும் தமிழகத்தில் இருக்கும் கிண்டி (guindy) போன்ற ஆங்கில ஸ்பெல்லிங் வித்தியாசமாக இருக்கும் பெயர்கள் குறி வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில்தான் இப்படி அதிகமாக இடங்கள் உள்ளது. இதனால் சென்னையில் உள்ள இடங்களின் ஆங்கில பெயர்களை மாற்ற கவனம் செலுத்தி உள்ளனர். பல மாதங்களாக அரசு இந்த யோசனையில் இருந்தது என்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் காலம்

ஆங்கிலேயர்கள் காலம்

சென்னையில் இருக்கும் பல இடங்கள் ஆங்கிலேயர் வைத்த பெயர்கள். ஆங்கிலேயர்கள் கொடுத்த ஆங்கில ஸ்பெல்லிங். இதனால் இதை மாற்ற வேண்டும். தமிழ்படுத்த வேண்டும் என்று அரசு முயன்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது ஆங்கில பெயருக்கான ஸ்பெல்லிங் மாற்றப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள். மிக கடினமாக மற்றும் வித்தியாசமாக இருக்கும் பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் வசதி

அனைத்து மக்களுக்கும் வசதி

முக்கியமாக மக்களின் வசதியை அரசு கருத்தில் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து ஊர் பெயர்களும் ஆங்கிலத்தில் தெரிந்தவர்களே கூட கிண்டி என்பதை guindy என்று எழுத தடுமாறுவார்கள். அப்படி இருக்கையில் சாதாரண மக்கள் ஆங்கில பெயர்களை படிக்க அதிகம் கஷ்டப்படுவார்கள். இதனால் அவர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பெயர்களை எளிமைப்படுத்தி இருக்கிறார்கள்.

அனைவரும் இனி பயன்படுத்தலாம்

அனைவரும் இனி பயன்படுத்தலாம்

இதெல்லாம் போக இந்த ஊர்களின் உண்மையான உச்சரிப்பு இதுதான். எழும்பூர் என்பதை egmore என்று ஆங்கிலேயர்கள் மட்டுமே சொல்லி வந்தனர்.அதை சரியான ஆங்கிலத்தில் எழுதுவதுதான் தமிழுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். இதுவும் கூட ஆங்கில ஸ்பெல்லிங்கை தமிழக அரசு மாற்றம் செய்ய காரணம் என்று கூறுகிறார்கள். இதனால் இதுபோன்ற இடங்களில் ஆங்கில எழுத்துக்களை அனைவரும் எளிதாக எழுத முடியும்.

அரசு குழப்பத்தை தவிர்க்க வேண்டும்

அரசு குழப்பத்தை தவிர்க்க வேண்டும்

இதன் மூலம் அரசு பணியாளர்களும் குழப்பத்தை தவிர்க்க முடியும் . அதாவது அரசு ஆவணங்களில் சரியான வகையில் ஆங்கிலத்தில் ஊர் பெயர்களை எழுத முடியும். உச்சரிப்பிற்கு ஏற்றபடி பெயர்கள் இருந்தால், எளிதாக அதை எழுத முடியும். அரசு பணிகள் எளிமையாக நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஆங்கில ஸ்பெல்லிங்கை மாற்ற முக்கிய காரணம்.

கெத்து காட்டும் எடப்பாடி

கெத்து காட்டும் எடப்பாடி

தமிழக அரசின் மிக முக்கியமான மூவாக இது பார்க்கப்படுகிறது. முக்கியமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முக்கியமான முடிவுகளில் இது ஒன்றாகும். தமிழகத்தில் புதிதாக நிறைய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் புதிய ஆங்கில பெயர்கள் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

காரணம் இல்லை

காரணம் இல்லை

இப்படி பெயர்களை மாற்றும் போது சில ஊர்களின் பெயர்களில் கூடுதலாக 'A' போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு காரணம், ஜோதிட காரணங்கள் இருக்கலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் இதற்கு பின் பெரிய அளவில் ஜோதிட காரணங்கள் எல்லாம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
Reason behind the sudden city name changes in Tamiladu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X