பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம்.. பிரபல பள்ளியிடம் இருந்து அதிரடியாக மீட்பு
சென்னை: சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் இன்டர்நேஷனல் பள்ளி ஆக்கிரமிப்பு செய்திருந்த 25 ஏக்கர் நிலத்தை பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர். நசரத்பேட்டை போலீசாருடன் சென்று அதிரடியாக மீட்ட அதிகாரிகள், அந்த இடத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.500 கோடி என்று தெரிவித்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கடந்த 2011, 2012 வாக்கில் வெறும் 3 லட்சம் , 4 லட்சம் என்று இருந்த இடங்களில் எல்லாம் இன்று, 18 லட்சம் , 20 லட்சம் என்கிற அளவில் உயர்ந்துள்ளது. சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு பிறகு நிலத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளில் நிலங்களை ஆக்கிரமிப்பதும் அதிகரித்தது. நீர் நிலைகள், நீர் வழிப்பாதைகள் என எல்லாவற்றையும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வளைத்து பட்டாவும் வாங்கினார்கள்.

அப்படி ஆக்கிரமித்த கட்டிடங்களால் தான், இன்றைக்கு சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்நிலையில் 2015 வெள்ளத்திற்கு பிறகு அரசு அதிரடியாக களம் இறங்கி, நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.. அதேபோல் அரசு நிலங்கள் எவை, எவை என்பதை தேடித்தேடி கண்டுபிடித்து அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குத்தகை நிலம்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் அருகே உள்ள கிராமம் பழஞ்சூர். இந்த பகுதியில் தனியார் இன்டர்நேஷனல் பள்ளி கொரோனாவிற்கு முன்பு வரை செயல்பட்டு வந்தது. பள்ளிக்கூடம் நடத்துவதற்காக 5 ஏக்கர் அரசு நிலத்தை அரசு குத்தகைக்கு எடுத்து இருந்தது. ஆனால் கொரோனா காலத்துக்கு பிறகு தனியார் செயல்படாமல் மூடப்பட்டது. இதனிடையே விதிமுறைகளை மீறி பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள சுமார் 20 ஏக்கர் நிலம் என மொத்தம் 25 ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு செய்து செயல்பட்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு: இது ஒருபுறம் எனில், தனியார் இண்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வந்த நிலத்தின் குத்தகை காலம் 2013-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி தொகையான ரூ.23 கோடியை பள்ளி நிர்வாகம் இதுவரை செலுத்தாமல் இருந்து வந்தது. இதேபோல் அரசு நிலத்தையும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்தது வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
25 ஏக்கர் நிலம் சீல் வைப்பு: இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்த நீதிமன்றமும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நசரத்பேட்டை போலீசார் தனியார் பள்ளி செயல்பட்டு வந்த இடத்துக்கு சென்றார்கள். அங்கு தனியார் பள்ளியின் ஒவ்வொரு அறையும் பூட்டி வைக்கப்பட்டிருந்த பூட்டுகளை உடைத்து அதில் இருக்கும் ஆவணங்களை எடுத்து வைத்து விட்டு வீடியோ பதிவு செய்து 'சீல்' வைத்தார்கள். மொத்த நிலத்தையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
500 கோடி மதிப்புள்ள நிலம்: மீட்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் கூறினார்கள். தற்போது மீட்கப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்கள் இருக்கிறது. இந்த கட்டிங்கள் எதுவும் இப்போது இடிக்கப்படவில்லை.. இந்த கட்டிடங்கள் இடிக்கப்படுமா அல்லது கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அரசு கல்லூரி அல்லது அரசு மருத்துவமனை அமைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications