Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினா கடற்கரையில் பொழுது போக்கு படகு சவாரி.. அதிரடி அறிவிப்புகள் வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என்பது உட்பட சுற்றுலாத் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.மதிவேந்தன், சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. அதன்படி, இன்று சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 30 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் முக்கியமான ஒன்று சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் கிளப் உடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும். என்பதாகும்.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

இதுகுறித்த அறிவிப்பு விவரம்: உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து (royal madras yacht club) மோட்டார் போட்கள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் அமைந்துள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையை மேலும் அழகூட்டும் வகையில் சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில், படகில் பயணித்து இயற்கை அழகினை ரசிப்பதற்காக தமிழகத்தில் முதல் முறையாக மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.

சொகுசு கப்பல் படகு சேவை

சொகுசு கப்பல் படகு சேவை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைதரும் நகரங்களான ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும்.

 கேபிள் கார்

கேபிள் கார்

கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரத்தினைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், புதிய பயண அனுபவங்களை சுற்றுலாப் பயணிகள் பெறவும், சுற்றுச் சூழலுக்கு உகந்த கேபிள் கார் வசதி தமிழகத்தில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்கள் மற்றும் ஆன்மிகத் தலங்களை இணைப்பதற்கான சாத்தியக் கூறு பற்றி ஆய்வு செய்யப்படும். முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதியில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளுடன் தங்கும் வசதி கொண்ட படகு இல்லம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

படகு இல்லம்

படகு இல்லம்

முதலியார் குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப் பகுதியில் நீர் விளையாட்டுகள், கடற்கரை விளையாட்டுகள், தேநீர் விடுதி போன்ற வசதிகளுடன் தங்கும் வசதி கொண்ட படகு இல்லம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஏலகிரியில் சாகச சுற்றுலா பல்வேறு பிரிவுகளுடன் மேம்படுத்தப்படும். ஒகேனக்கல்லில் நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் அமைக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+