Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு எல்லாம் கூடி வருதோ.. கோட்டைக்கு நெருக்கமாக இருந்த எக்ஸ் ஐபிஎஸ்.. தவெகவில் சேர முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர முடிவு செய்துள்ளாராம். ஒரு காலத்தில் ஆளும் கட்சியான திமுகவிற்கு, கோட்டையில் நடக்கும் பல பணிகளுக்கும் நெருக்கமாக இருந்த அந்த அதிகாரி தற்போது தவெகவில் ஐக்கியம் ஆக பேசி வருகிறாராம்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் இணைந்தது வெறும் தொடக்கம்தான். இனிதான் மெயின் பிக்சர் இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதாவது இன்னும் பல அரசியல் தலைவர்கள் தவெக பக்கம் வர வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன.

கணித்த ஐபிஎஸ் எக்ஸ்?

ஆனால் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சில முன்னாள் அதிகாரிகளும் தவெக பக்கம் வர ஆர்வம் காட்டி வருகிறார்களாம். பொதுவாக அரசியல் மாற்றங்களை அரசியல் தலைவர்களை விட அதிகாரிகள் வேகமாக கணிப்பார்கள். எந்த கட்சிக்கு ஆதரவு உயருகிறது என்பது அதிகாரிகளுக்கு தெரிந்துவிடும்.

Retired IPS Officer shares his wish to join the TVK Chief Vijay party

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை தொடர்புகொண்டு, அவரது அரசியல் பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் செயல்பாடுகளுக்குத் தேவையான வழிகாட்டுதல், வியூகம் சார்ந்த உதவிகள் மற்றும் நிர்வாக அனுபவத்தை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த அதிகாரி நேரடியாக விஜய்யிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அதிகாரபூர்வமாக கட்சியில் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அவர் பேசியதாகவும் தெரிகிறது. கட்சியில் இல்லாத ஒழுங்கை நான் கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியதாக தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

இளைஞர்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பை உருவாக்கும் அவரது முயற்சிகளையும் அந்த அதிகாரி பாராட்டியுள்ளார். சட்டம்-ஒழுங்கு, பொது நிர்வாகம், அரசு செயல்பாடுகள் குறித்த தனது அனுபவம், விஜயின் அரசியல் பயணத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் விஜய்யிடம் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொள்ள விஜய் தயங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையனிடம் ஒருமுறை பேசிவிட்டு அதன்படி முடிவு எடுக்கலாம் என்ற திட்டத்தில் விஜய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தயங்கும் விஜய்

தனது அரசியல் முடிவுகளை எச்சரிக்கையுடனும், கட்டுப்பாட்டுடனும் எடுக்க விஜய் விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். தனது தனிப்பட்ட வட்டத்தில் யாரை அனுமதிப்பது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். கட்சியின் அடுத்த முக்கிய அறிவிப்பு வருவதற்கு முன், எந்தவித சர்ச்சையோ அல்லது குழப்பமான சிக்னல்களோ வரக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.

முன்னாள் அரசு அதிகாரிகள் அல்லது ஓய்வுபெற்றவர்களின் செல்வாக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவை என்று விஜய் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எல்லோருக்கும் உடனே இடம் கொடுக்க கூடாது என்று விஜய் நினைக்கிறாராம். கட்சி தனது சொந்த அடையாளத்துடன் வளர வேண்டும் என்றும், வெளியிலிருந்து வரும் எந்த ஆதரவையும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் விஜய் கருதுவதாக கூறப்படுகிறது.

விஜய்யின் தயக்கம்

விஜய்யின் தயக்கம் இருந்தபோதிலும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி, கட்சிக்கு பலம் சேர்க்கும் எந்தப் பொறுப்பிலும் பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் மவுனம் காத்து வருகின்றனர், மேலும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

விஜய் அமைக்கும் குழு

இந்த நிலையில்தான் தவெக கட்சிக்கு ஆலோசனை வழங்க புதிய குழுவை விஜய் உருவாக்க உள்ளாராம். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அவர் அமைக்கவுள்ளார்.

இந்தக் குழுவில், முன்னாள் காவல்துறை இயக்குனர் (DGP) மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) உட்பட 18 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இடம்பெறுவார்கள். கரூர் விவகாரம் போன்ற சம்பவங்கள் இனி நடப்பதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்த தகவலறிந்த வட்டாரங்களின்படி, இந்தக் குழுவின் முதன்மைப் பணி, பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு திட்டமிடல் குறித்து கட்சியின் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து, வழிகாட்டுவதாகும். விஜய்யின் பொது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இனி அவர் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருக்கும். இதனால் மக்கள் அதிக அளவில் கூட வேண்டி இருக்கும். அதை எல்லாம் சமாளிக்க திட்டமிடல் அவசியம். இதையடுத்தே இந்த குழுவை விஜய் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பல ஆண்டு கால அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள், அச்சுறுத்தல் மதிப்பீடு, நேரத்தை கடைபிடித்தல், மேடைப் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற விவகாரங்களில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவார்கள். அரசு வழங்கும் பாதுகாப்பை மட்டும் நம்பி இருக்காமல், விஜய்க்கு ஏற்றபடி கூட்டங்களை திட்டமிடுவது அவசியம் என்று கருதி தவெக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+