"1000 ரூபாய்".. யார் யாருக்கு கிடைக்கும்.. விளக்கம் தந்த நிதியமைச்சர்.. வாயடைத்து போன எதிர்கட்சிகள்
மிகவும் ஏழ்மையான குடும்பதலைவிகளுக்கானது மட்டுமே 1000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்த நிலையில், இப்போது அது மிகவும் ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கானது மட்டுமே என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.. இன்று நடந்த பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையே வித்தியாசமாக இருந்தது.. வழக்கமாக இலவசங்களை நிரப்பி வைத்திருக்கும் தேர்தல் அறிக்கையானது, இந்த முறை ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளாக இருந்தது.. இலவசங்கள் அவ்வளவாக இல்லாமல் யதார்த்தமான அறிவிப்புகளாகவே இடம்பெற்றிருந்தது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
ஆனால், பெண்களுக்கு மாதம் ரூ.1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பானது மிக முக்கிய கவனத்துடன் பார்க்கப்பட்டது.. இதே அறிவிப்பைதான் கமல் அதற்கு தேர்தல் அறிக்கையில் முன்னதாகவே வெளியிட்டிருந்தார்.. திமுக 1000 ரூபாய் என்று அறிவித்ததுமே, அதிமுக 1500 ரூபாய் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது.

வாக்குகள்
ஆகமொத்தம், 3 கட்சிகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான திட்டங்களை அறிவித்திருந்தனர்.. பெண்களை கவரும் வகையிலேயே, முக்கியமாக அவர்களின் வாக்குகளை பெறும் வகையிலேயே இந்த அறிவிப்புகள் பார்க்கப்பட்டன.. அதேசமயம், இந்த அறிவிப்புகள் எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகும்? என்ற சந்தேகமும் எழுந்தது... இந்த சந்தேகம் திமுக தரப்பை பார்த்துதான் அப்போது பெரும்பாலும் எழுப்பப்பட்டது.

நிபுணர்கள்
அதற்கு சில பொருளாதார நிபுணர்கள் விளக்கமும் தந்தார்கள்.. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 2.02 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன... இதன்படி, 2 கோடியே 1,50,000 மகளிர் வருவார்கள்... மீதமுள்ள 50,000 பேர் இந்த நிதியுதவியின்கீழ் வருவார்களா என்பதை ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அறிவிக்கும். இவர்களின் வங்கிக் கணக்குக்கு மாதம்தோறும் அந்த பணம் சென்றுவிடும்.. 2 கோடி வீடுகளில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் சென்று சேரும்... அப்படிப் பார்த்தால் 24,000 கோடி ரூபாய் செலவாகும்.

இழப்பு
2020- 21-ல் தமிழ்நாடு பட்ஜெட் என்பது 3 லட்சம் கோடிக்கும் மேல்... நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) என்பது 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும்... இவற்றில் 24,000 கோடிகளை செலவிடுவது மிக எளிதானது. தமிழ்நாட்டின் ஜிடிபியை ஒப்பிட்டால் இது வெறும் 1 சதவிகித தொகை மட்டுமே... பட்ஜெட்டின்படி பார்த்தால் 8 சதவிகிதம் வருகிறது... 2 கோடி மக்களுக்கு நல்லது செய்வதற்காக 8 சதவிகிதத்தை ஒதுக்குவது என்பது பெரிய விஷயமல்ல என்று ஒரு விளக்கத்தை தந்திருந்தனர்.

எல்.முருகன்
இதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த 1000 ரூபாய் விவகாரம் கிளப்பப்பட்டது.. முதலில் இதை ஆரம்பித்ததே எல்.முருகன்தான்.. ஒருமுறை செய்தியாளர்களிடம் பேம்போது, "திமுகவின் ரூ.1000 திட்டம் சாத்தியமில்லை.. விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று திமுக இதற்கு முன்னர் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படும் என்பதை ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்? ஏமாற்றுவதற்கு திமுகவிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்'" என்றார்..

திமுக
அதாவது, ரூ.1000 இலவசமாக தர முடியாது என்றால், ரூ.1500 எப்படி கொடுக்க முடியும், அது மட்டும் சாத்தியமாகுமா? என்று முருகன் அதிமுக பற்றி கேள்வியே எழுப்பவில்லை.. மாறாக, திமுகவை மட்டுமே அவர் விமர்சித்திருந்தார். இதற்குபிறகு, அதிமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளுமே 1000 ரூபாய் குறித்து கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்..

மய்யம்
ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட அம்சங்களை உடனடியாக நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டமும் நடத்தியது.. நிச்சயம் 1000 ரூபாய் வழங்கப்படும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அமைச்சர் உட்பட பலரும் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
Recommended Video

வதந்திகள்
இதற்கு நடுவில் இந்த 1000 ரூபாய் வழங்குவதில் நிறைய குழப்பங்கள், சந்தேகங்கள், வதந்திகள் எழுந்தன.. முதலில் குடும்ப தலைவராக இருந்தால் மட்டுமே பெண்களுக்கு தமிழக அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒரு வதந்தி பரவியது. இது உண்மையா என்றுகூட ஆராயாமல், ஏராளமான பெண்கள் குடும்ப தலைவரின் பெயரில் இருந்து தங்களது கணவர் பெயரை நீக்கிவிட்டு தங்கள் பெயரை சேர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நிறைய இல்லதரசிகள் தங்கள் பெயரை ரேஷன் அட்டையில் மாற்றுமாறு அலுவலகங்களில் விண்ணப்பித்திருந்தனர்.

எதிர்பார்ப்பு
இன்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்று எதிபார்க்கப்பட்டது.. அந்த வகையில், பெண்களுக்கு நிதியுதவு அளிக்கும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த 1000 ரூபாய் அறிவிப்பும் குறித்தும் உரிய விளக்கம் அளித்துள்ளார்.. அதன்படி, குடும்ப தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை என்று கூறியுள்ளார்..

குடும்பத்தலைவி
பிடிஆர் பேசும்போது, "குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் எல்லோருக்கும் வழங்கப்படாது.. சரியான பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கான குழு அமைக்கப்படும்.. இந்த திட்டத்தின் நோக்கமே இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கவேதான்... குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவி கிடைக்கும் என சில தரப்பில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.

இல்லத்தரசிகள்
இதனால், பல குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை குடும்பத்தின் தலைவராக மாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். எனவே, குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை" என்றார்.

அறிக்கை
அதாவது, திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த உரிமை தொகை மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதைதான் தற்போது, அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. .. அதேசமயம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற ரூ2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு
இப்படி ஒரு அறிவிப்பை திமுக அறிவிக்க காரணமே, மகனையோ அல்லது வேறு யாரையேனும் எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களை கவுரவிப்பதற்காகத்தான் மாதந்தோறும் ரூ 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்பதை வாக்குறுதியாக தந்திருந்தது.. அந்த வகையில், ஏழ்மை நிலைமையில் உள்ள பெண்களுக்கு இந்த 1000 ரூபாய் பணம் என்பது அவர்களுக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு குடும்பத்திலும் என்பதில் மாற்று கருத்தில்லை.. அதேசமயம், புலம்பி கொண்டும், குற்றச்சாட்டுகளை வீசிக் கொண்டுமிருந்த எதிர்க்கட்சிகளின் வாயையும் திமுக அரசு இன்றைய தினம் அடைத்துள்ளது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications