கயல் சீரியல் ஹீரோயின் ’சின்னம்மா’! திவாகரன் பேச தொண்டர்கள் கைதட்ட.. கடைசியில் பொங்கி எழுந்த சசிகலா!
சென்னை : சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனது கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா அதிமுகவுடன் இணைக்கும் நிகழ்ச்சியில் பேசிய திவாகரன், கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ அது போல் தான் சின்னம்மா என பேசிய நிலையில், அதிமுகவின் நடப்பதையெல்லாம் இப்படியே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சசிகலா கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பின் காரணமாக அவரது தோழியான சசிகலா சிறைக்கு சென்றார்.
அப்போது அவருடன் எற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இடைக்கால முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

திவாகரன் கட்சி
இதனையடுத்து டி.டி.வி.தினகரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து வெளியேறிய நிலையில், டிடிவி தினகரன், திவாகரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இச்சூழலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்னும் பெயரில் கட்சியை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கினார்.

சகோதரி சசிகலா
திவாகரன் கட்சியில் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக்கூடாது என வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா. இதைத்தொடர்ந்து சசிகலா இனி என் சகோதரி இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பின்போது திவாகரன் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் தினகரன் அண்ணா திராவிடர் கழகத்தை அதிமுகவுடன் திவாகரன் இன்று இணைதுள்ளார்.

கயல் சீரியல் சின்னம்மா
தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வருகின்றன இன்று காலை தஞ்சாவூரில் நடைபெறும் என சசிகலா கூறியிருந்தார். அதன்படி இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திவாகரன்," ஜெயலலிதா, சசிகலாவுக்கு மந்திரி பதவி வழங்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார். கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ அது போல் தான் சின்னம்மா, எதற்கும் ஆசைப்படாதவர் சின்னம்மா அதிமுகவில், இக்கட்டான சூழ்நிலை வந்தபோதெல்லாம், அதனை எதிர்கொண்டு கழகத்தைக் காப்பாற்றியவர் புரட்சித்தாய் சின்னம்மா" என்றார்.

கேலிக் கூத்து
நிகழ்ச்சியில் பேசிய சசிகலா," அதிமுக வரலாற்றில் ஆண்டுக்கு ஒரு முறை சட்டத்திட்டங்களை யாரும் மாற்றியதில்லை, இது மிகப்பெரிய கேலி கூத்தாக உள்ளது. சட்டப்படி இவர்கள் செய்வது செல்லாது. இதையெல்லாம் இப்படியே நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது, திமுகவினரின் மக்கள் விரோத ஆட்சியால், அவர்களைத் தள்ளிவைக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும், நம் இருபெரும் தலைவர்களின் ஆட்சி மீண்டும் வராதா? என மக்கள் எண்ணுகின்றனர் என்றும் தெரிவித்தார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் இதை உணர முடிவதாகவும்" அவர் கூறினார்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications