வீட்டில் நிர்வாணமாக கிடந்த நபர்.. 2வது கணவருக்கு சென்ற மிரட்டல்.. சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன்!
சென்னை: கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி, மேயர் சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது கணவனை பிரிந்து இரண்டாவதாக ராமசாமி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டனர்.
ஏற்கனவே திருமணம் ஆன ராமசாமி தனது மனைவியை புரிந்துவிட்டு சசிகலா புஷ்பாவுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராமசாமிக்கும் சசிகலா புஷ்பாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புகார்
இவர்கள் அண்ணா நகரில் உள்ள ராமசாமிக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவை பார்க்க சில ஆண்கள் அவ்வப்போது வந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆண்களை வீட்டிற்கு அழைத்து வர கூடாது என்று ராமசாமி எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா புஷ்பா ராமசாமிக்கு இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சண்டை முற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பணி நிமித்தமாக ராமசாமி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

சசிகலா புஷ்பா
அப்போது சசிகலா புஷ்பா தனது வீட்டில் போதையில் படுத்து கிடந்ததாக ராமசாமி புகார் அளித்துள்ளார். மேலும் வீட்டில் பல இடங்களில் ஆண் உறைகள் கிடந்ததாகவும்., வீடு முழுக்க பல இடங்களில் மது பாட்டில் கிடந்ததாகவும், இன்னொரு அறையில் பெண் ஒருவர் போதையில் இருந்ததாகவும் ராமசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இன்னொரு அறையில் ஆண் அரைகுறை ஆடையுடன் கிடந்ததாகவும் ராமசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த நிலையில் அதை உடனே ராமசாமி வீடியோவாக எடுத்துள்ளார்.

புகார்
அதோடு போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸ் வருவதற்கு முன் அந்த அறையில் அரைகுறை ஆடையுடன் இருந்த ஆணும், சசிகலா புஷ்பாவும் ராமசாமியை தாக்கி அவரின் போனில் இருந்த வீடியோவை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ராமசாமி புகாரின் பெயரில் சசிகலா புஷ்பா மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் அந்த வீட்டில் இருந்த அமுதா, தஞ்சாவூர் ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

வழக்கு
சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது கணவர் ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ஜெ.ஜெ.நகர் போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சி, முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதில் இன்று சசிகலா புஷ்பா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்தது.

முன் ஜாமீன்
அதில், தொழில் சம்பந்தமாக தன்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட 11 மணிக்கு மேலாகி விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்ததாகவும், தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது கணவர் ராமசாமி தான், தன்னை மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

ஜாமீன் கோரிக்கை ஏற்பு
இருப்பினும், அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய பிரிவுகள் எனக் கூறிய நீதிபதி பொங்கியப்பன், 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த 15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் போலீசில் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications