• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புது சிக்கலில் "அந்த" அமைச்சர்.. சசிகலாவுக்காக மறைமுகமாக துடிப்பதால்.. அடுத்த புள்ளி "அவர்"தானாம்!

|

சென்னை: அதிமுகவின் அதிருப்திக்கு இன்னொரு அமைச்சர் ஆளாகி வருகிறாராம்.. காரணம் சசிகலாவுக்கு அவர் மறைமுக ஆதரவு தந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 4 ஆண்டு கால ஆட்சியை சிறப்பாக நடத்தி முடித்த மகிழ்ச்சியிலும் தெம்பிலும் உள்ளார்.. மீண்டும் இந்த ஆட்சியை தக்க வைக்கவும் போராடி வருகிறார்.

இதனிடையே, சசிகலா பெங்களூரில் இருந்து வந்ததில் இருந்தே அமைதியாக இருக்கிறார்.. யாரையும் சந்திக்கவில்லை.. ஆலோசனையும் நடத்தவில்லை.. செய்தியாளர்களையும் பார்க்கவில்லை.. என்ன முடிவில் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருக்கிறது.

 சசிகலா

சசிகலா

அதேசமயம், சசிகலாவுக்கு ஒருசிலர் ஆதரவாக இருந்து வருவதாகவும் செய்திகள் வந்தபடியே உள்ளன.. அவர் சென்னைக்கு வந்த அன்றே, அதிமுகவுக்குள் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கும், சலசலப்பு எழும், பரபரப்பு கிளம்பும், என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.. கடைசியில் அப்படி ஒரு விஷயமே எதுவும் நடக்கவில்லை. இதற்கு காரணம், அதிமுக தலைமை விதித்த ஒரு சில கட்டுப்பாடுகள்தான்.

புள்ளிகள்

புள்ளிகள்

இதையும் மீறிதான், ஓரிரு புள்ளிகளின் பெயர் அடிபட்டு வருகிறது.. இவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.. அந்த வகையில் ராஜேந்திர பாலாஜி, ஒரு யாகத்தை அவருக்காக நடத்தினார் என்று செய்திகள் வந்தன.. இப்போதும் ஒரு அமைச்சர் பெயர் அடிபடுகிறது.. பெங்களூரிலிருந்து சென்னைக்கு, காரில் சசிகலா வந்தபோது, அவருக்கு திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெரும் வரவேற்பு தென்பட்டது.. நிறைய கூட்டமும் சேர்ந்தது... அதற்கு காரணம், வணிக வரித்துறை அமைச்சராக இருக்கலாம் என்கிறார்கள்.

 அதிருப்தி

அதிருப்தி

இவர் மீது ஏற்கனவே கட்சி தலைமைக்கு அதிருப்தி உள்ளதாம்.. தொகுதியில் தொண்டர்களை மதிப்பதில்லை உட்பட பல விஷயங்கள் குறித்த புகார்களும் சென்றுள்ளது.. எனினும், இவர் மீது நடவடிக்கையை கட்சி தலைமை எடுக்க வேண்டும் என்பதால்தான், அதிமுகவை சேர்ந்த சில நிர்வாகிகள் அமமுகவுக்கு தாவி உள்ளனர், அவர்கள்தான் சசிகலாவை வரவேற்பதில் அன்றைய தினம் அக்கறை காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

திமுக

திமுக

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை... இது வதந்தியாகவே இருக்கும் பட்சத்தில்கூட, வடமாவட்டங்களில் திமுக செல்வாக்கை பெற்று வரும் நிலையில், அதிமுகவில் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடம் தராமல் இருக்க வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எண்ணமாக இருக்கிறது.. அத்துடன் மேற்கண்ட மாவட்டங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தினால்தான், வரப்போகும் தேர்தலில் சேதாரமின்றி வாக்குகளை அள்ள முடியும் என்றும் நம்பப்படுகிறது.

 
 
 
English summary
Sasikala Returns and Local Politics in ADMK Party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X