இதயத்தில் ஓட்டை.. உயிருக்கு போராடும் 6 வயது சிறுமி! காப்பாற்ற உடனே உதவுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதயத்தில் ஓட்டையுடன், உயிர்வாழ தினம் தினம் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் 6 வயது சிறுமி ஜனனியை காப்பாற்ற உடனே உதவுங்கள். உங்களுடைய சிறிய உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஜனனி பிறந்து 3 மாதங்களில் தொடங்கி இப்போது வரை கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இப்போது அவருக்கு 6.4 வயது ஆகிறது. உடல்நலப் பிரச்சனையை தீர்க்க பெற்றோர் கும்பிடாத சாமியில்லை. இருப்பினும் ஜனனி நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தார். சமீபத்தில் ஒருநாள் MIOT மருத்துவமனையில் நடைபெற்ற இலவச பரிசோதனை முகாமில் அவருடைய உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. அங்குதான் ஜனனியின் இதயத்தில் ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

heart

மருத்துவர்கள் இதனை perimembranous VSD என்று கூறுகிறார்கள். மேலும், அசாதாரண இரத்த நாள அமைப்பு காரணமாக அவளின் மேல் உடலுக்கு இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்து ஜனனியின் உயிரை காப்பறாற்ற உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3,75,000 செலவாகும். ஆனால், ஜனனியின் குடும்பத்திற்கு இந்தத் தொகையை ஏற்பாடு செய்வது சாத்தியமற்றது.

ஜனனியின் தந்தை விஜயகாந்த் ஓட்டுநராக பணிபுரிகிறார். இவரின் மாத வருமானம் வெறும் ரூ.16,000 தான். சில சமயங்களில் இந்த வருமானமும் நிச்சயமற்றதாக இருக்கும். தன் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, உணவு கூட இல்லாமல் பல மணி நேரம் வேலை செய்கிறார். மனைவி குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் இல்லத்தரசியாக இருக்கிறார். வாடகை, உணவு செலவுகள் மற்றும் குழந்தைகளின் பள்ளி கட்டணம் போன்றவற்றால் அவர்களின் வருமானம் முழுமையாக செலவாகிறது. சேமிப்பு அல்லது அவசர கால நிதி என்று எதுவுமே அவர்களிடம் இல்லை.

இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்கள் மனிதாபிமானத்தை மட்டுமே நம்பியிருக்கின்றனர். ரூ.3,75,000 என்ற தொகை ஒரு மிகப்பெரிய மலையைப் போல அவர்களின் முன் நிற்கிறது. ஒவ்வொருமுறையும் ஜனனி மூச்சு திணறும்போது, அவளது உயிர் பிரிந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கள் வேண்டுகிறார்கள்.

heart

மனிதநேயம் தங்கள் குழந்தையை காப்பாற்றும் என்று இந்த குடும்பம் உங்கள் முன் நம்பிக்கையுடன் நிற்கிறது. ஜனனி வளரவும், மற்ற குழந்தைகளை போல விளையாடவும், பள்ளிக்குச் சென்று தான் விரும்பிய வாழ்க்கையை வாழவும் உங்கள் ஆதரவு அவசியம். சிறிய உதவியாக இருந்தாலும் அது ஜனனியின் எதிர்காலத்தை மாற்றும்.

உங்கள் அன்பான உதவி அவளின் இதயத்தை சரிசெய்து, அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கும். ஜனனியின் உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ முன்வாருங்கள். நாம் ஒன்று சேர்ந்து இந்தச் சிறுமிக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்குவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+