பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. இப்படியெல்லாமும் உங்க பணம் திருடப்படலாம்!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிங்கை அனுப்பும் ஏமாற்றுக்காரர்கள் அதில் பான் எண்ணை அப்டேட் செய்யுமாறு கூறி வங்கிக் கணக்கில் உள்ள அத்தனை பணத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்கள். எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களே உஷாராக இருங்கள்.
தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள் வரவர ஏமாற்றுதல், பொய் பித்தலாட்டங்களும் அதிகரித்து வருகின்றன. அப்போதெல்லாம் பணம் வேண்டுமானால் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டும். அப்போது இவர்கள் எடுக்கும் பணம் குறித்த விவரங்களை அங்கு அறியும் மர்ம நபர்கள் பெரிய தொகையாக இருந்தால் அவர்களை திசை திருப்பி பறித்துச் செல்லும் சம்பவங்கள் நடந்தன.
இல்லாவிட்டால் சட்டையில் ஒரு வித இங்கை தெளித்துவிட்டு "சார் சட்டையில் ஏதோ கறை" என திசை திருப்பி பணத்தை அடித்து செல்லும் காட்சிகளும் நாம் பார்த்துள்ளோம். தற்போது டெக்னாலஜி வளர வளர நூதன திருட்டுகள் வருகின்றன.

ஏடிஎம் கார்டு
வயதானவர்கள், ஏடிஎம் கார்டை எப்படி பயன்படுத்துவது என தெரியாதவர்கள் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்று யாராவது வருவார்கள் அவர்களை வைத்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என காத்திருப்பார்கள். அவ்வாறு வருவோர் நல்லவர்களாக இருந்தால் அவர்களுக்கு பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு அறிவுரையை வழங்குவார்கள். திருடர்களாக இருந்தால் அவ்வளவுதான் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிடுவார்கள்.

பணம் பறிப்பு
இன்னும் சிலர் லிப்ட் கேட்டு செல்கிறார்கள் . ஆள் அரவம் இல்லாத இடங்களில் இன்னொருத்தரையும் அதாவது கூட்டாளியையும் ஏற்றி செல்கிறார்கள். அவர்கள் லிப்ட் கேட்டு வந்த ஆளின் இடுப்பில் கத்தியை வைத்து மிரட்டி ஏடிஎம் மையத்திற்கு அழைத்து சென்று பணத்தை அவரைவிட்டே எடுக்க சொல்லி அவரை அந்த இடத்தில் விட்டுவிட்டு பணத்தை பறித்து வருவார்கள்.

எந்த கஷ்டமும்
இப்படியாக நடந்த திருட்டுகள் தற்போது எந்த கஷ்டமும் இன்றி உட்கார்ந்த இடத்தில் செய்கிறார்கள். ஏதாவது ரேண்டமாக ஒரு எண்ணுக்கு போன் செய்கிறார்கள். அதில் பேசுபவர் ஏமாளியா, கெட்டிக்காரரா என்பதை பேசும் தொனியில் கண்டுபிடித்துவிட்டு அவர்களிடம் ஏடிஎம் கார்டின் 12 இலக்க எண்ணை கேட்பர். பின்னர் கார்டின் பின்னால் உள்ள 3 இலக்க சிவிவி எண்ணையும் கேட்டு பணத்தை திருடி வந்தனர்.

நாமம்
இன்னும் சிலர் வங்கி அதிகாரி பேசுவது போல் பேசி லோன் தருகிறோம், குறைந்த வட்டி என ஆசைக்காட்டி அதை எப்படி அப்ளை செய்வது என தெரியாமல் உள்ள வயதானவர்களிடம் நைசாக பேசி வங்கிக் கணக்கு எண், நெட் பேங்கிங்கிற்கான பாஸ்வேர்ட் எல்லாவற்றையும் வாங்கிவிட்டு நாமத்தை குழைத்து போட்டு விடுகிறார்கள். இன்னும் சில நூதன மோசடிகளும் உள்ளது. அதாவது ஒரு எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அதில் கோடி ரூபாய் பரிசு விழுந்ததாக சொல்லி அந்த கோடியை பெற சில ஆயிரங்களை பதிவுக் கட்டணமாக அனுப்ப வேண்டும் என சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

எஸ்பிஐ வங்கி மோசடி
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மோசடி தற்போது பாமரர்கள் பயன்படுத்தும் பாரத ஸ்டேட் வங்கியில் நடந்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியே தனது வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் மெசேஜை அனுப்புகிறது. மேலும் மோசடி மெசேஜ் எந்த நம்பரில் இருந்து வருகிறது என்பதையும் எஸ்பிஐ தெரிவிக்கிறது. அதில் ஒரு வெப்சைட் அட்ரஸ் கொடுக்கப்பட்டு அதில் உங்கள் பான் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என கேட்கிறது. அவ்வாறு கிளிக் செய்தால் நம் வங்கிக் கணக்கில் இருக்கும் அத்தனை பணமும் திருடப்படுகிறது (Dear SBI user your SBI YONO A/c has been blocked please update your PAN CARD click here to login your net banking update your PAN numbar. Such a message is been sent from +918653097921. DO NOT CLICK ON THE LINK. YOUR MONEY WILL BE LOOTED.
) . எனவே யாரும் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என வங்கி அறிவுறுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications