கயிறு கட்டக்கூடாது.. கம்மல்,காப்புக்கு தடை.. பிறந்தநாள் அன்றும் சீருடை- மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு
சென்னை : பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பிறந்தநாள் அன்றும் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்துதான் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காப்பு போன்ற அணிகலன்களை அணியவும், கம்மல், செயின் போன்றற்றை அணிந்து பள்ளிக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பிரிவினை
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்று முன்னேறும் வகையில் அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி ரீதியான மோதல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடையே சாதிய, வகுப்பு ரீதியான பிரிவினை அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.

உயிர் பலி வரை
சமீபமாக இந்தப் பிரச்சனை உயிர்பலி வரை செல்வது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மே மாதம், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர் ஒருவருக்கும், சக மாணவருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில், அது பெரிதாகி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழக்கும் நிலைக்குச் சென்றது. இதையடுத்து, பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பினர்.

கயிறு கட்டக் கூடாது
இந்நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, சாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக்கூடாது என்று சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல, வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றறிக்கை
பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தச் சுற்றறிக்கையில், பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிந்து வரக் கூடாது, எண்ணெய் தேய்த்து தலை சீவியிருக்க வேண்டும், உடம்பில் டாட்டூ குத்தக்கூடாது, காலணி அணிந்து வரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வண்ண உடை அணியக் கூடாது
மேலும், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும், புதிய வண்ண உடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என்றும் கட்டுப்பாடுகளை மாணவர்களுக்கு விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications