தமிழகத்தில் முதல் நாளில் 2945 பேருக்கு தடுப்பூசி.. 2வது நாளாக இன்றும் பணிகள் தொடர்கிறது
சென்னை: தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான நேற்று 2945 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 166 மையங்களில் தலா 100 பேர் வீதம் 166000 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் உள்பட சுகாதார போரில் முன்கள வீரர்கள்ளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. கோவேக்சி, கோவீசீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் போடப்படுகின்றன.

தமிழகத்தில் முதல் நாளான நேற்று 2945 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 166 மையங்களில் தலா 100 பேர் வீதம் 16 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்த முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மிகக் குறைந்த சதவீத அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்தார்கள்.
சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள பலரும் தயக்கம் காட்டினர்.. பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மையங்களுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் நேற்று ஒரு நாளில் 2945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் வரும் நாட்களில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் சுகாதாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications