மதுரை அன்பு ‘ஐடி’ ரெய்டு! ஏ.கே. மட்டுமில்ல.. எஸ்.கே. பட ஷூட்டிங்கும் நிறுத்தம் - 'மாவீரன்' வருவானா?
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை காரணமாக அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பும் நின்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அன்புச்செழியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்..

அறிக்கை
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

சிண்டிகேட்
இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்தது.

நிதி பற்றாக்குறை
வருமான வரித்துறை சோதனை காரணமாக அன்புச்செழியனிடம் நிதி பெற்று தயாரிக்கப்பட்டு வந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில், ஐடி ரெய்டுக்கு பிறகு அன்புச்செழியன் யாருக்கும் நிதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் 61 படத்திற்கு தேவையான நிதி இல்லாததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது.

சிவகார்த்திகேயன் படம்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிக்கும் இதே காரணத்தால் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கும் பைனான்ஷியர் பணம் தராததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications