கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்காமல் தமிழக முதல்வர் விஜய் சென்னை திரும்புவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில் இன்று காலை 10 மணிக்கு நடக்கவிருந்த இந்த முக்கிய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.. அடுத்த வாரம் இந்த சந்திப்பு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த திடீர் திருப்பத்திற்கான பின்னணி என்ன என்று தெரியவில்லை.

முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார்.. பிரதமருடன் 10 நிமிடங்கள் வரை மட்டுமே நீடித்த ஆலோசனையில் தமிழ்நாட்டின் சில முக்கிய தேவைகள் குறித்தான 4 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி இருக்கிறார் தமிழக முதல்வர்.

CM Vijay Sonia Gandhi Amit Shah Delhi Politics Tamil Nadu Politics Vijay Political News Chennai News Political Twist

அமித்ஷா - விஜய்

அதேபோல நிதி அமைச்சருடன் கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் வரை சந்திப்பு நீண்டுள்ளது.. அப்போது தமிழ்நாட்டினுடைய நிதி தேவையை கோருதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் முதலமைச்சரும் நிதி அமைச்சரும் விரிவாக ஆலோசித்ததாக தெரிகிறது.

பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்திக்க முதலமைச்சர் திட்டமிட்டிருந்தார்.. ஆனால், அந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.. அசாம் மாநிலத்தின் பாதுகாப்பு பணிகள் சார்ந்த விவகாரங்கள் மற்றும் இன்னும் சில மாநிலங்களின் முக்கிய விவகாரங்கள் குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றதால், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும், வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் என்றும் விளக்கம் தரப்பட்டது.

டெல்லியில் முதலமைச்சர் விஜய்

ஆனால், முதலமைச்சர் விஜய் சந்திக்க இருந்த அதே குறிப்பிட்ட நேரத்தில், கேரளாவின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசனை உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்.. இதுகுறித்த போட்டோக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டன..

இதனால் முதலமைச்சர் விஜயை உள்துறை அமைச்சர் சந்திக்காததற்கான காரணம் என்ன, முறைப்படி அவர்கள் அனுமதி கோரவில்லையா அல்லது அணுகிய பிறகும் அனுமதி வழங்கப்படவில்லையா போன்ற பல்வேறு கேள்விகள் நீடித்து வருகின்றன?

சோனியா காந்தி, ராகுல் சந்திப்பு

அதேபோல காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களை நேற்றைய தினம் சந்திக்கக்கூடும் என்ற விவரங்கள் வெளியாகியிருந்தன.. மேலும், இந்த சந்திப்பை முன்னிட்டு விஜய்யை வரவேற்க பேனர்களும் வரை வைக்கப்பட்டிருந்தது சோஷியல் மீடியாவில் பெரும் கவனத்தையும் பெற்றிருந்தது..

ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. இன்று காலை 10 மணியளவில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த சந்திப்பும் நடைபெறவில்லை..

சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், அடுத்த வாரம் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றனவாம்.. இந்த தகவலை ஆங்கில தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது..

காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ஏன் இல்லை

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வரும் சூழலில், டெல்லி சென்ற முதல்வர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காதது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.. இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது கூட்டணி கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்த வருகின்றன..

மொத்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயினுடைய இந்த இரண்டு நாள் டெல்லி அரசு முறை பயணத்தில், அவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரை மட்டுமே நேரில் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+