• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்டாலினே கூப்பிட்டு நேரடியாக பேசினால்.. வேற லெவல்.. அழகிரிக்காக காத்திருக்கும் "கழுகுகள்"!

Google Oneindia Tamil News

சென்னை: முக அழகிரியின் விஸ்வரூப வளர்ச்சிக்காக சில கட்சிகள் காத்துள்ளன.. இதனால், ஸ்டாலினே கூப்பிட்டு அழகிரியிடம் பேசினால்தான் இதுக்கு ஒரு முடிவும், தீர்வும் கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தனிக்கட்சி தொடங்கும் யோசனையில் மறுபடியும் இறங்கி உள்ளார் முக அழகிரி.. இதற்கு முன்பே இந்த பெயரில் கட்சி தொடங்குவதாக சொல்லப்பட்டது.. ஆனால், ஏனோ அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.. அதை பற்றின பேச்சும் இல்லை.

ஆனால் ஒருசில மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து ஒரு பாஜக தலைவர் அழகிரியை சந்தித்து பேசியதாகவும், அப்போது இந்த தனிக்கட்சி ஆரம்பிப்பது பற்றி உரையாடியதாகவும் கூறப்பட்டது.

புதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல் புதுச்சேரியில் துவங்கியது கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்.. முதல்வர் நாராயணசாமி அசத்தல்

 திமுக

திமுக

"ஒரு கட்சி ஆரம்பியுங்கள்.. திமுகவில் இருந்து 5 எம்எல்ஏக்களை தருகிறோம்... அதை குக செல்வம் பார்த்து கொள்வார்.. கட்சி செலவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.. அமைச்சர் பதவியும் தருகிறோம்.. என்ன சொல்றீங்க?" என்று பாஜக தலைவர் முக அழகிரிக்கு கொக்கி போட்டாராம்.. இதற்கு அப்போதே அழகிரி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

 தீபாவளி

தீபாவளி

ஆனால், இந்த தீபாவளி முதல் அழகிரியின் நிலைப்பாட்டில் மாறுதல் தென்பட்டு வருகிறது.. தன்னுடைய ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் அழகிரியே போன் போட்டு தீபாவளி வாழ்த்து சொல்லி உள்ளார்.. அண்ணே நீங்களா..ண்ணே என்று ஆச்சரிய அதிர்ச்சியில் திளைத்தும் விட்டனராம்.

 தீபாவளி

தீபாவளி

"ஒன்னுமில்லே... தீபாவளி வாழ்த்து சொல்லத்தா கூப்பிட்டேன்" என்று அழகிரி சொல்லியதுடன், தனிக்கட்சி தொடர்பாகவும் அவர்களிடம் கருத்து கேட்டுள்ளார். இதையடுத்து, உச்சக்கட்ட மகிழ்ச்சிக்கு போன நிர்வாகிகள் பலரும் அழகிரியின் கட்சிக்கு கலைஞர் கருணாநிதி என்ற பெயரையும், 'அண்ணா கலைஞர் திமுக' என்ற பெயரையும் வைக்குமாறு மாறி மாறி யோசனைகளை சொல்லி வருகிறார்கள்.இப்படி ஒரு தகவலை கேட்டு திமுக கூடாரம் நிலைகுலைந்து போய்விட்டதாம்!

 அமமுக

அமமுக

அதுமட்டுமல்ல, அழகிரி கட்சியை ஆரம்பித்தால், அவருடன் சேர்ந்து களமிறங்க அமமுக, பாஜக, ரஜினி மன்றங்கள் போன்றவைகள் பெரும் ஆவலுடன் காத்துள்ளன.. இதுவும் திமுகவுக்கு அடுத்த எரிச்சலை கிளப்பி உள்ளது.. அமமுகவை பொறுத்தவரை, அழகிரியுடன் எப்போதுமே இணக்கமான போக்கு உள்ளது.. முக்கியமாக தென்மாவட்டங்களில் அழகிரிக்கு இருக்கும் செல்வாக்கை தன்பக்கம் வைத்து கொள்ளவும் எண்ணம் உள்ளது.. அதனால் எப்படியும் டிடிவி தினகரன் அழகிரியை விட்டுத்தர மாட்டார் என்றே சொல்கிறார்கள்.

பாஜக

பாஜக

அதேபோல, பாஜகவை பொறுத்தவரை, இவ்வளவு காலம் அழகிரியை சுற்றி வந்தது வீணாகிவிட கூடாது என்றும் கணக்கு போடுகிறது.. திமுகவுக்கு ஒரு கிலியை தர அழகிரியால் மட்டுமே முடியும் என்று நம்புகிறது.. அதனால் வெளியில் இருந்தாவது ஆதரவு தர வேண்டும் என்ற கோரிக்கையை நிச்சயம் வைக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 நொறுங்கிவிட்டது

நொறுங்கிவிட்டது

இதில் திமுக போட்ட ஒரு கணக்கு நொறுங்கி வருகிறது.. திமுகவை எப்படியும் ரஜினியும், பாஜகவும் சுற்றி சுற்றி வருவதால், கண்டிப்பாக பாஜக பக்கமே சாய்வார், அல்லது ஆதரவு தருவார் என்று நினைத்து திமுக அசால்ட்டாக நினைத்த நிலையில், திடீரென தனிக்கட்சி என்பது திமுக கூடாரத்தை அசைத்து வருகிறது.

டேமேஜ்

டேமேஜ்

அழகிரியை பொறுத்தவரை ஒருவிஷயத்தில் தெளிவாக இருக்கிறார்.. பாஜகவில் சேர்ந்தால் அது தன்னையும், தனது இமேஜை அது டேமேஜ் செய்யும் என்று சரியாக கணக்கு போட்டுள்ளார்.. மேலும், பாஜகவில் இணைந்தால் அதில் இணைய திமுகவினர் தயக்கம் காட்டலாம் என்பதால், பேசாமல் தனிக் கட்சியை ஆரம்பித்தால் எல்லாருமே தயக்கமின்றி தைரியமாக வந்து சேருவார்கள், ஸ்டாலினை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற கணக்கையும் போட்டு வருவதாக தெரிகிறது.

 பலம்

பலம்

அதனால் எப்படியும் அழகிரி கட்சியை ஆரம்பித்தால், திமுகவின் பலம் சரிவடையவே செய்யும் .. இதற்கு ஒரே வழி ஸ்டாலினே அழகிரியிடம் பேசுவதுதான்.. இன்னும் ஓபனாக சொல்லபோனால், அழகிரியை கட்சிக்குள் கொண்டு வருவதுதான்.. இதை ஸ்டாலின் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

English summary
Sources say that Mk Azhagiri will start New Party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X