சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது - மழைக்கு வாய்ப்பில்லை

Google Oneindia Tamil News

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாறும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது . அதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என்றும் கூறியது.

South East Bay intensify as a low pressure area IMD prediction

இந்த நிலையில் இன்றைய தினம் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிக்கு செல்ல வேண்டாம்.

ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத் தீவு பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2 முதல் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India Meteorological Department has predicted the cyclonic circulation over the South-East Bay to intensify as a low pressure area over the South-East Bay and adjoining South Andaman Sea by Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X