அப்படி சொல்ல கூடாது! ஆளுநர் கொடுத்துட்டார்..ஆனாலும் அப்படி பேசக்கூடாது! அப்பாவு இப்படி சொல்லிட்டாரே
சென்னை : தமிழ்நாடு என்ற பெயர் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ள நிலையில் ஆளுநர் பொதுவெளியில் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசி ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்பது அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன.
ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது. மேலும் ஆளுநருக்கு தமிழக சட்டசபையிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

ஆளுநர் விளக்கம்
இந்நிலையில் எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது மற்றும் யதார்த்ததுக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,""2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

'தமிழகம்'
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

தவறானது
கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை எனது மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்." எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது.

அப்பாவு விளக்கம்
இந்நிலையில் ஆளுநரின் விளக்கம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அவர்,"ஆளுநர் ரவி தமிழ்நாடு என பேசிய விவகாரம் சட்டப்பேரவையில் நடக்கவில்லை. அதற்கு வெளியே தான் தமிழ்நாடு தமிழகமாக என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் ஆளுநர் தமிழகம் என்ற வார்த்தையை எதற்காக பயன்படுத்தினேன் என்பது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். தான் உள்நோக்கம் இல்லாமல் தான் பேசினேன் எனவும் கூறியிருக்கிறார்.

அவசியமும் இல்லை
சட்டப்பேரவைக்குள் நடந்த விவகாரத்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை ஆளுநரின் விளக்கத்தை மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் இந்த விஷயத்தில் ஆளுநருக்கு நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் பொதுவெளியில் ஆளுநர் இப்படி வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. தமிழ்நாடு என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தை.

சரியல்ல
பல தமிழர்கள் உயிர் தியாகம் செய்தால் தான் இந்த பெயர் வந்தது தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து இதற்காகவே தனது உயிரை விட்டார். கடுமையான உடல் குறைவால் அவதிப்பட்ட போது கூட அறிஞர் அண்ணா பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டார் என்பது மறக்கவே முடியாத வரலாறு. தமிழ்நாடு அரசியல் அமைப்பின் தலைவராக இருக்கும் ஆளுநர் இப்படி பொதுவெளியில் பேசுவது சரியல்ல" என அப்பாவும் விளக்கம் அளித்து இருக்கிறார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications