சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெகா கூட்டணியில் இணைகிறது திமுக.. நாயுடு சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை : சந்திரபாபு நாயுடு முன்எடுக்கும் பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியில் திமுக இணைவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2014 பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தெலுங்குதேசம் கட்சி அண்மையில் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது. அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க ஆந்திர முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். மாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டி வரும் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்தார்.

வரவேற்கிறேன்

வரவேற்கிறேன்

இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது, நடைபெற்றுக் கொண்டிருக்க பாஜக ஆட்சியை நீக்க சந்திரபாபு நாயுடு அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே ராகுல்காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசி இருக்கிறார். அந்த சந்திப்பை நான் வரவேற்றிருந்தேன்.
ஏற்கனவே மாநில உரிமைகள் பாஜக ஆட்சியில் முழுமையாக பரிக்கப்பட்டிருக்கிறது, அதை தடுக்க மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சியில் இருக்கக் கூடிய பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

பாஜகவை வீழ்த்த வேண்டும்

பாஜகவை வீழ்த்த வேண்டும்

சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை கூட தனித்து செயல்பட விமாமல் அச்சுறுத்தும் வகையில் தான் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்க பாஜக ஆட்சியை விரட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற முயற்சியைத் தான் சந்திரபாபு நாயுடு எடுத்திருக்கிறார்.

ஆதரவு அளிக்கிறேன்

ஆதரவு அளிக்கிறேன்

அந்த அடிப்படையில் தான் திமுகவின் ஆதரவு வேண்டும் என்று என்னை சந்தித்து ஆதரவு கோரினார். நான் முழு மனதோடு என்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறேன்.

ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்பேன்

ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்பேன்

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் விரைவில் டெல்லியிலோ அல்லது வேறு ஏதாவது மாநிலத்திலோ அனைத்து தலைவர்களும் ஒன்று கூடி அடுத்தகட்டமாக தேர்தலுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்றெல்லாம் ஆலோசிக்கலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருக்கிறார். நானும் அந்த கூட்டத்தில் பங்கேற்பேன் என்று உறுதி அளித்திருக்கிறேன்.

நிச்சயம் குறைந்தபட்ச திட்டம் இருக்கும்

நிச்சயம் குறைந்தபட்ச திட்டம் இருக்கும்

குறைந்தபட்ச திட்டம் என்ற அடிப்படையில் தலைவர் கருணாநிதி இது போன்ற தேர்தல் கூட்டணிகளுக்கு ஒப்பு கொண்டுள்ளார். அதே போன்று நிச்சயமாக ஒரு குறைந்த பட்ச திட்டம் இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
DMK chief M.K.stalin accepts Chandrababu naidu request to join in grand alliance for 2019 loksabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X