ஸ்வாஹா! வங்கி வாராக் கடன்! கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு! சு.வெங்கடேசன் ஆவேசம்..!
சென்னை : ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன் இருக்கும் நிலையில், வசூல் ஆனது 19000 கோடி மட்டுமே எனவும், கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்... கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் நேற்று வங்கி வாராக் கடன்கள் குறித்து பேசிய போது," நாட்டின் பொருளாதார சூழல், துறை சார்ந்த பிரச்னைகள், சர்வதேச வர்த்தக இடர்ப்பாடுகள் உட்பட பல்வேறு காரணங்களால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்கிறது என்றார்.

மேலும், இந்த வாராக் கடனை குறைக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன எனவும், இதன் வாயிலாக, கடந்த எட்டு ஆண்டுகளில் வங்கிகள், 8.60 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்துள்ளன என்றார்.
இந்நிலையில் ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன் இருக்கும் நிலையில், வசூல் ஆனது 19000 கோடி மட்டுமே என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனது 19000 கோடி. மீதம் ஸ்வாஹா... கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம். கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்...
கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள்...இப்படியாக மக்கள் சேமிப்புகள் சூறை. கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications