சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜவுளி நிறுவனங்களுக்கு செக்..! 100க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ரெய்டு.. என்ன காரணம்? பரபர தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜவுளி நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. ஜவுளி நிறுவனங்கள் போலியான ஆவணங்களைத் தயாரித்து வணிக வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார்கள் உள்ளன. இது தொடர்பாக வணிக வரித்துறையினருக்கும் பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டன.

Sudden raid on more than 100 places of textile companies in tamil nadu

இந்த புகார்களின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களுக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் மட்டும் போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 6 இடங்களிலும், சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 இடங்களிலும், ஆர்எம்கேவி நிறுவனத்துக்குச் சொந்தமான 2 இடங்களிலும், நல்லி சில்க்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு இடத்திலும் என 13 இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல சென்னையில் 39 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், மதுரையில் 13 இடங்கள் என ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் 103 இடங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஷாக்..! சென்னை, கோவை என இரு மாவட்டங்களில் 200ஐ கடந்த வைரஸ் பாதிப்பு.. மீண்டும் உயரும் கொரோனாஷாக்..! சென்னை, கோவை என இரு மாவட்டங்களில் 200ஐ கடந்த வைரஸ் பாதிப்பு.. மீண்டும் உயரும் கொரோனா

English summary
Raid in more than 100 places across Tamilnadu. textile companies raid the latest news
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X