டாஸ்மாக் கடைகளுக்கு சண்டே லீவு... இன்றே குவிந்த குடிமகன்கள் - முழுவதுமாக மூடப்படுவது எப்போது
முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையடுத்து மதுபான கடைக்கு விடுமுறை விடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றே இரண்டு நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர் குடிமகன்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வகுப்புகளும் தேர்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு லாக்டவுன்
வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே, ஜனவரி 2, 9,16 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நான்காவது வாரமாக நாளைய தினம் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து பிற கடைகள் செயல்படாது.

ஆட்டோ டாக்ஸி
பொது போக்குவரத்துக்கு அனுமதியில்லை. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

குவிந்த குடிமகன்கள்
இந்நிலையில், முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இன்றைய தினமே ஏராளமானோர் டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். இரண்டு நாட்களுக்குத் தேவையான சரக்குகளை பைகளில் வாங்கிச் செல்கின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தில் விடுமுறை
தமிழகத்தில் ஏற்கனவே, ஜனவரி 2, 9,16 முழு ஊரடங்கு நாளிலும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோல் நாளையும் டாஸ்மாக் கடை அடைக்கப்பட உள்ளது. வரும் 26ஆம் தேதி குடியரசுத் தினத்தன்றும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மூடப்படுவது எப்போது
கடந்த காலங்களில் கொரோனா பரவல் அதிகரித்த போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள், வழிபாட்டுத்தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications