நாளை முழு ஊரடங்கு: திருமண விழாக்களுக்கு செல்லலாமா?.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு 10,000-ஐ நெருங்கி விட்டது. ஆக்டிவ் கேஸ்களும் உச்சத்தில் உள்ளன. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.

நாளை முழு ஊரடங்கு
பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். பெட்ரோல் பங்க்குகளும் செயல்படலாம்.

திருமண விழாக்களுக்கு செல்லலாம்
ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட்ட திருமண விழாக்கள் வருவதால், திருமண விழாக்களுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் சென்றன. இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்துள்ளது. அதாவது தமிழகத்தில் நாளை திருமண விழாவுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருமண அழைப்பிதழ் அவசியமா?
திருமண விழாவுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை போலீசாரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. திருமண விழாவுக்கு செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தாமல் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமண மண்டப கட்டுப்பாடுகள்
அதே வேளையில் திருமண மண்டபத்தில் 100 பேர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. திருமண விழாக்களில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications