Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்.. மோடியிடம் கோரிக்கை வைத்த பொன்முடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

Recommended Video

    Anna University Convocation | உயர்கல்வியில் Tamilnaduதான் முதலிடம் - Minister Ponmudi பெருமிதம்

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

    Support the educational development of Tamil Nadu, Ponmudis request to Prime Minister Narendra Modi

    இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டரும் பங்கேற்றனர்.

    அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை நிகழ்த்தினார். அனைவரையும் வரவேற்ற அவர் உயர்கல்வியில் தமிழகம் தலை சிறந்து திகழ்வதாக கூறினார்.

    பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாது வேலை கொடுப்பவர்களாகவும் மாற வேண்டும் என்று கூறினார். அவர் பேசியதாவது: டாக்டருக்குப் படித்தவர்கள் எப்படி தனியாக மருத்துவமனைகள் தொடங்குகிறார்களோ அது போல பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சிறு சிறு தொழிற்கூடங்களை தொடங்கி தொழில் முனைவோர்களாக வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

    மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் உயர்கல்வியில் பதக்கங்களை பெறுகிறார்கள். மாணவிகள் அதிக அளவில் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் தமிழக அரசு சார்பில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.இந்தியாவிலேயே மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அறிவித்த ஒரே முதல்வர் நமது முதல்வர்தான்.

    மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% சதவிகித இட ஒதுக்கீட்டையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உண்டான விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்கள்.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாண்புமிகு பிரதமர் அவர்களிடம், பணிவன்போடு நான் வேண்டிக்கொள்கிறேன். தமிழகத்தினுடைய கல்வி வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பணிவன்போடு நான் மீண்டும் ஒருமுறை நம்முடைய பிரதம அமைச்சர் அவர்களை அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அவர் நிச்சயமாக தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு உதவுவார் என நம்பிக்கையோடு மீண்டும் ஒருமுறை அவருக்கு என்னுடைய நன்றியையும் வரவேற்பையும் சொல்லி விடைபெறுகிறேன்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+