பாஜகவின் பக்கா மூவ்! திருச்சி சிவாவின் மகனை தூக்கிய பாஜக! பரபரப்பில் உடன்பிறப்புகள்! பரபர பின்னணி
சென்னை : திமுக முக்கிய பிரமுகர்கள் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது
மத்திய தமிழகத்தின் திமுக பிரமுகர்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒரு முக்கிய நிர்வாகி என்றால் திருச்சி சிவா என்று கண்ணை மூடிக்கொண்டு உடன்பிறப்புகள் சொல்லுவார்கள்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த போதும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருக்கும் போதும் கட்சியில் திருச்சி சிவாவுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் ஒருபோதும் குறைந்தபாடில்லை.

திருச்சி சிவா எம்பி
தீவிர திராவிட இயக்க கொள்கைப் பற்று உள்ளவராக திருச்சி சிவா திமுக சார்பில் பலமுறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அளவுக்கு திமுக முக்கிய தலைவர்கள் இடத்திலும் தொண்டர்கள் இடத்திலும் செல்வாக்கு உள்ளது. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல சர்ச்சைகளில் திருச்சி சிவா சிக்கி வருகிறார்.

சில சர்ச்சைகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக மாநிலங்களவை பெண் உறுப்பினர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் அந்தப் பெண் எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததாகவும் அப்போது பரபரப்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மகன் சூர்யா சிவா
இதையடுத்து கட்சிக்குள் அவருக்கு இருந்த செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அதனை திருச்சி சிவாவும் திமுக தலைமையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவரது குடும்பத்திற்கும் சிறுசிறு சலசலப்புகள் அவ்வப்போது எழுவது வழக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளரிடம் பேசிய அவரது மகன் சூர்யா தனது தந்தை குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பாஜகவில் இணைகிறார்
இந்நிலையில்தான் திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாஜக அண்ணாமலை
இரண்டொரு நாளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை வந்ததும், அவரை நேரில் சந்தித்து கட்சியில் இணையவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் திமுகவின் பிரபல பேச்சாளரும் நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான செய்தி திமுகவில் குறிப்பாக திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications