'கோவை என்கவுண்டர் 2010'.. சைலேந்திர பாபு செய்த தரமான சம்பவம்.. மாணவர்களுடன் நெருக்கமான நாட்கள்
கோவை: கோவை ஜவுளிக் கடை அதிபர் மகள் முஸ்கின், மகன் ரித்திக்கை கொலை செய்த காமகொடூரனான டிரைவர் மோகன்ராஜை, சைலேந்திர பாபு தலைமையிலான கோவை காவல் துறை டீம் தான் 2010ல் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியது. அப்போது இந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.
Recommended Video
தமிழகத்தின் டிஜிபியாக பதவியேற்க உள்ள சைலேந்திர பாபு ஐபிஎஸ் அதிரடியான என்கவுண்ட்டர்களுக்கு பெயர் போனவர். வடசென்னையில் பல ரவுடிகளை ஒழித்தவர் என்றாலும் இவர் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த போது நடந்த சம்பவம் உலகையே உலுக்கியது.
கோவை ரங்கே கவுடர் வீதி, காத்தான் செட்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். இவர் ஜவுளிக்கடை நிறுவனர் ஆவார். இவரது மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு முஸ்கின் ஜெயின் என்ற 11 வயது மகளும், ரித்திக் ஜெயின் என்ற 8 வயது மகனும் இருந்தனர். இருவரும் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில் முறையே 5 மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர்.

பாலியல் வன்கொடுமை
அவர்கள் தினமும் பள்ளிக்கு கால்டாக்சியில் செல்வது வழக்கம். கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி அவர்களை கால்டாக்சி டிரைவர் மோகன்ராஜ் கடத்தி சென்றான். அப்போது சிறுமி முஸ்கினை காமகொடூரானாக மாறி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான். அத்துடன் முஸ்கினின் தம்பி ரித்திக்கையும் கொலை செய்தான்.

ஜெயலலிதா பாராட்டு
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளை உயிருடன் விடக்கூடாது என்று தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான நிலை இருந்து. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர். அப்போது கோவை சிட்டி கமிஷனராக சைலேந்திரபாபு இருந்தார். இந்த விவகாரம் பற்றி போலீஸுக்கு தகவல் வந்த உடன், மோகன்ராஜ்-யையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவனையும் போலீசார் பிடித்தனர். அதன் பிறகு நடந்த என்கவுன்டரில் மோகன்ராஜ் கொல்லப்பட்டான். இதை 2010ல் ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

சிறையில் மனோகரன்
மோகன்ராஜின் கூட்டாளி மனோகரனுக்கு தூக்குத்தண்டனையை வாங்கி கொடுத்துள்ளது காவல்துறை. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்துவிட்டு தற்போது மனோகரன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் துரிதமாக ஆதாரங்களை சேகரித்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல செய்தது உள்ளிட்டவற்றில் கோவை மாநகர கமிஷ்னராக 2010ல் இருந்த சைலந்திர பாபுவின் பங்கு முக்கியமானது.

கோவை மக்கள் அன்பு
கோவையில் கமிஷனராக இருந்த 2010 கால கட்டம் தான் மாணவர்களுடன் சைலேந்திர பாபு இன்று வரை நெருக்கமாக இருக்க. காரணம், கோவை மக்கள் பண்போடும், அன்போடும் பழகியதை ஒருமுறை கூறிய சைலேந்திர பாபு. கோவை மக்கள் தங்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள் அங்கு, அடிக்கடி மாணவர்கள் பலர் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள் அதுதான் மாணவர்களுடனான நெருக்கமான பயணத்துக்குத் தொடக்கம் என்று என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications