திமுகவுக்கு தாவும் "குல்பி.." இப்பவே கண்ணை கட்டுதே.. மளமளவென கரையும் ஜி.கே.வாசன் கட்சி
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுக்க, ஜிகே வாசன், சுற்றுப் பயணத்தை துவங்கிய முதல் நாளிலேயே அவருக்கு குல்பி வடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் அவரது கட்சி, சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது. தமிழக அரசியலில் ஏற்கனவே மிக சோர்வாக இருந்த த.மா.கா.வின் இரண்டாம் நிலை தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்தல் தோல்வியால் மீண்டும் துவண்டு போய்விட்டனர்.
இதனால் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

வாசன் சுற்றுப் பயணம்
கட்சியிலிருந்து பலரும் விலகுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தன் கண் முன்னே கட்சி கரைவதை ஜீரணிக்க முடியாத நிலையில் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்து தனது இருப்பைக் காட்டிக்கொண்டார் வாசன். மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக அறிவித்தார். நேற்று முதல் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பையும் ஆரம்பித்தார்.

குல்பி விலகல்
ஆனால் முதல் நாளே, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவையை சேர்ந்த தமாகா கொள்கை பரப்பு செயலாளர் குல்பி தங்கராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
"தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறார். எனவே, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்." என்று குல்பி தங்கராஜ் ஒரு குண்டை வீசியுள்ளார்.

கொ.ப.செ விலகல்
அது மட்டுமில்லை. குல்பி தங்கராஜ் விரைவில், திமுகவில் இணைய உள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கனவே பலரும் திமுகவில் இணைந்து விட்ட நிலையில் கட்சியின் கொ.ப.செவும் கழன்று கொண்டுள்ளதால் அதிர்ச்சியிலுள்ளார் ஜிகே வாசன். எதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும்; அரசியல் முடிவுகளையும் எடுக்க வேண்டும். இதை புரிந்துகொள்ளாதவராக இருக்கிறார் வாசன் என்ற புலம்பல்கள் கட்சியில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

கட்சியை கலைத்துவிடுவது நல்லது
கட்சியில் ஏற்கனவே ஊருக்கு 4 பேர் தான் இருக்கிறார்கள். அதனால் இப்படி சுற்றுப்பயணம் செய்வதை விட்டுவிட்டு, கட்சியின் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி, கட்சியை கலைத்துவிட்டு உரிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் வாசனை நம்பியவர்களுக்கு நல்லது என்கிறார்கள் மூப்பனார் விசுவாசிகள்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications