டிஎன்பிஎஸ்சி தேர்வு...எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே- பிடிஆர் பழனிவேல் ராஜன் உறுதி
ஆவின், போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவின் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு பணியிடங்களும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் மட்டுமே நிரப்பப்படும் என்றும் தமிழக சட்டசபையில் பேசிய பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை தொடர்பான கூடுதல் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்பு குறித்த சட்ட முன்வடிவை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.

பிடிஆர் பழனிவேல் ராஜன்
இந்த சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. மசோதவை தாக்கல் செய்து பேசிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டில் எல்லா அரசு பணியிடங்களும் தமிழர்களுக்கு மட்டுமே. மாநகரம், பல்கலை கழகம் ஆகியவற்றிலும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

முதல் துணை மதிப்பீடு
இந்தநிலையில், 2021- 22ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதன்படி அரசின் பல்வேறு துறைகளின் கூடுதல் செலவினங்களுக்காக 3 ஆயிரத்து19 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.300 கோடி ஒதுக்கீடு
இதில் குறிப்பிடும் படியாக கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழையால் ஏற்பட்ட சேதங்களை கருத்தில் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள்
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு முன்பணமாக 182 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications