தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் யார் யார்? அண்ணாமலை நாளை டெல்லி பயணம்.. பாஜக தலைமையிடம் பேசுகிறார்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார். வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் யார் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து பாஜக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே எஞ்சியுள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கியுள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதே வேளையில், அதிமுக இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா என்று தெரியவில்லை.

கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் கவலையில்லை. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவை தோல்வி அடைய செய்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது.
அண்ணாமலை டெல்லி பயணம்: அதே நேரத்தில் தமிழக பாஜக தலைமை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மூன்றாவது அணியை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. பாஜக + பாமக + தேமுதிக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + ஏசி சண்முகம், மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். கூட்டணி தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் அண்ணாமலை ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அண்ணாமலை டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மோடி தமிழகம் வருவதற்குள்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மோடி வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். மோடி தமிழகம் வருவதற்குள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைத்து தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதற்கு அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications