பழகுவதற்கு இனியவர் ஆளுநர் ரவி! தனிப்பட்ட முறையில் ஆளுநருடன் மோதல் இல்லை! சட்டசபையில் முதல்வர் பேச்சு
சென்னை : ஆளுநர் ஆர்.என்.ரவி பழகுவதற்கு இனியவர் என்றும், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை முடக்கி வைத்திருப்பதால் தான் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்ததாகவும் , அவருடன் தனக்கு எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் , மீண்டும் சட்டசபையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நீட் விலக்கு மசோதா
அந்த மசோதாவினையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் ரவி அனுப்பி வைக்கவில்லை. மேலும் பல மசோதாக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உரசல் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. இதேபோல கட்சி ரீதியாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் மனிதநேய மக்கள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

ஆளுநர் தேநீர் விருந்து
ஆளுநர் விருந்தில் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி பழகுவதற்கு இனியவர் என்றும் நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை முடக்கி வைத்திருப்பதால் தான் அவரது தேநீர் விருந்தை புறக்கணித்ததாகவும் , அவருடன் தனக்கு எந்த தனிப்பட்ட விரோதம் இல்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், " நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு மசோதா 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகையில் கவனிப்பாரின்றி முடங்கிக் கிடக்கிறது. அப்படிப்பட்ட வேளையில் அதே ஆளுநர் மாளிகையில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுடைய உணர்வுகளை புண்படுத்தும்.

புறக்கணித்ததற்கு விளக்கம்
சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாக அமையும் என்பதாலும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலாத நிலை அரசுக்கு ஏற்பட்டது. இதுகுறித்து ஆளுநருக்கு நானே ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். மாண்புமிகு ஆளுநருடன் எங்களுக்கு எந்த விதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை, இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சராக எனக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. நேரில் பேசும் போது இந்த ஆட்சியில் செயல்பாடுகளை மிகவும் பாராட்டி அவர் பேசியிருக்கிறார்.

ஆளுநருக்கு மரியாதை
நாங்கள் ஆட்சி நடத்தும் விதம் குறித்து பொது மேடையிலேயே ஆளுநர் பாராட்டிப் பேசியிருக்கிறார். அது ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனிமையானவர் எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார். ஆளுநர் என்ற முறையில் அந்தப் பதவிக்கு உரிய மரியாதையை நாங்களும் தருகிறோம் அழித்துக் கொண்டிருக்கிறோம் தொடர்ந்து அளிப்போம். இது அரசியல் நிலையை கடந்த பண்பாடு. இந்த பண்பாட்டை நாம் எப்போதும் காக்கவேண்டும் காப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டுகளை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகளும் பலன்களுமே முக்கியம்.

வலிகள் அவமானங்கள்
அதையே முக்கியமானதாக நான் கருதுகிறேன் இந்த தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் மாண்பை தமிழ்நாடு மக்களின் உரிமையை நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. மசோதாவை அனுப்பி வைக்காமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். கடந்த 50 ஆண்டு கால எனது பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும் அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன் எனக்கு ஒரு பொருட்டல்ல. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது வலிகளையும் அவமானங்களையும் புகழ்ச்சிகளையும் புகழுரை என்று ஒதுக்கி விட்டு என் கடன் பணி செய்து கிடப்பதே என செயல்படுவது, அப்படித்தான் நான் செயல்பட்டு வருகிறேன்." என பேசினார்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications