கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான தங்க நகைக் கடன் ரத்து! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் இது ஒன்று. எனவே, எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகைக் கடன் தள்ளுபடியாகும் என்ற நம்பிக்கையில் வட்டியை கூட கட்டாமல், கடன் பெற்றவர்கள் காத்திருப்பதால், கூட்டுறவு வங்கிகளுக்கு நிதிச் சுமை கூடிக் கொண்டே போன நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியானது.

கணக்கெடுப்பு
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது மற்றும், கூட்டுறவு வங்கிகளின் நிதிச் சுமை அதிகரித்துக் கொண்டே போவதற்கு தற்காலிக பிரேக் போடுவது என்ற இரு விஷயங்களையும் செய்ய அரசு தீவிர கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தது. தகுதியான பயனாளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் இதை உறுதி செய்தார்.

5 பவுன் நகைகள்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என்றும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை சேகரித்துள்ளதாகவும், அதில் 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Recommended Video

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் விரைவில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கும், பின்னர் அனைத்து மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இப்போது, நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டால், அது திமுகவுக்கு தேர்தலின்போது சாதகமாக இருக்கும். ஒருவேளை இதை அறிவிக்காவிட்டால், அதிமுக தரப்பு அதை ஒரு முக்கிய பிரச்சினையாக தேர்தல் களத்தில் முன் வைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஸ்டாலின் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இன்று அறிவிப்பு
சட்டசபையில் இன்று, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை, நிதித் துறை, மனிதவள மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், அந்த துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகின. இன்றுதான் நடப்பு சட்டசபை கூட்டத் தொடரின் இறுதிநாளாகும். எனவே, இதில் 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று 110 விதியில் அவர் அறிவித்தார். அவர் இதன்மூலம் 6 ஆயிரம் கோடி அளவிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.. உண்மையான ஏழைகள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி இருக்கும் என்று அவர் தெரிவித்தார். மார்ச் மாதம் 21ம் தேதி வரை கடன் பெற்றவர்கள் மட்டும் தான் இதற்கு தகுதி உடையவர்கள். ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு, கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சட்டசபையில் இது தொடர்பாக மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. நகை கடன் தள்ளுபடியில் தவறுகள் நடைபெற கூடாது என்பதற்காக, நகை கடன் தள்ளுபடி பற்றி தீவிரமான மற்றும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, நகை கடன்கள் தொடர்பாக முழு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம். தகுதியான நபர்களை கண்டறிவதற்காக கடந்த ஒரு மாத காலமாக, தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. நகை கடன் வாங்கியவர்களின் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விபரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் வாங்கிய வாடிக்கையாளரின் தகவல் குறிப்பு, ஆதார் எண், எண் அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது.

முறைகேடுகள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் கடன் பெற்றிருந்தால் அல்லது அந்தியோதயா அன்னயோஜனா போன்ற வறுமையில் வாடுபவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளை தவறாக பெற்றிருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது. இது குறித்த விதிமுறைகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையின் போது நகை கடன் தள்ளுபடி பற்றி நாங்கள் அறிவித்தோம். எனவே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எண்ணத்தில், முறைகேடாக அவசரமாக பலரும் கடன் வாங்கி இருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கிகள் மீது உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications