இங்க பாருங்க.. ஸ்டாலினையே விமர்சனம் செய்யும் "தமிழக முதல்வர்" டுவிட்டர் பக்கம்.. ஏன் இப்படி?
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் முதலமைச்சருக்கான ட்விட்டர் பக்கத்தில் திமுகவை விமர்சனம் செய்த ட்வீட்கள் இடம்பெற்றுள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுதான் இப்போதைய நிலவரமாக மாறி இருக்கிறது.
Recommended Video
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்தபோது, CMOTamilnadu என்ற ட்விட்டர் கணக்கு முதல்வருக்காக வழங்கப்பட்டிருந்தது.
இது தவிர, எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரில் அவருக்கான தனி ட்விட்டர் கணக்கும் இருந்தது. கட்சி சார்ந்த விஷயங்களை தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிலும், அரசு தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கான தனிப்பட்ட டுவிட்டர் கணக்கிலும் வெளியிடுவது வழக்கம். சில நேரங்களில் திமுகவினரை விமர்சனம் செய்தும் முதல்வர் அக்கவுண்டிலிருந்து ட்வீட் செய்திருப்பார்.

முதல்வரான ஸ்டாலின்
தற்போது தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். ஆனால் முதல்வருக்கான ட்விட்டர் பக்கம், எடப்பாடி பழனிசாமி டீமிடம்தான் இருந்தது. இந்த அக்கவுண்டுக்கு ப்ளூ டிக் மார்க் கொடுத்துள்ளது ட்விட்டர் நிர்வாகம். அதாவது ஆவணங்களை பரிசீலித்து, முதல்வர் என்பதை உறுதி செய்து, உறுதிப்படுத்தப்பட்ட கணக்கு என்பதற்காக இந்த ப்ளூ டிக் கொடுக்கப்பட்டது.

முதல்வருக்கான அக்கவுண்ட்
தமிழக முதல்வர் என்பதுதான் அக்கவுண்ட் பெயர் என்பதால், இப்போது யார் முதல்வராக இருக்கிறாரோ அவர் பாஸ்வேர்ட் உள்ளிட்டவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர பிறர் பயன்படுத்த முடியாது. திமுக ஐடி விங் சார்பில், ஸ்டாலின் தற்போது முதல்வராக இருப்பதற்கான ஆவணங்கள் டுவிட்டர் நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதை ஸ்டாலின் டீமின் கட்டுப்பாட்டுக்கு மாற்றி எடுக்க வேண்டும்.

எடப்பாடி ட்வீட்
அப்படி ஏதும் நடக்காத நிலையில் எடப்பாடிபழனிசாமி இதை பயன்படுத்தியதால் டுவிட்டர், அந்த பக்கத்தை முடக்கியது. தற்போது மீண்டும் முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிவும் வெளியாகவில்லை. பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக இருந்தபோது வெளியிட்ட ட்வீட்தான் கடைசி ட்வீட்டாக இருக்கிறது.

ஸ்டாலினை விமர்சனம் செய்யும் ட்வீட்கள்
இந்த ட்வீட்டுகள் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினை விமர்சனம் செய்யும் வகையில் மற்றும் திமுக கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் இருக்கின்றன. இப்போது ஸ்டாலின் முதல்வராக இருக்கும் நிலையில் முதல்வருக்கான டுவிட்டர் பக்கத்தில் ஸ்டாலினை விமர்சனம் செய்து ட்வீட்டுகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு திமுக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுப்பதை, சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications