அதிமுகவில் சண்டை! பேசி தீர்த்துக்கங்க..‘தீர்த்துட்டு’ பேசாதீங்க.. அதிமுகவுக்கு அடடே அறிவுரை சொன்ன அழகிரி
சென்னை : அதிமுகவில் கருத்து வேறுபாடு இருந்தால், நாகரீகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும், வேறு விதமாக தீர்த்துக் கொள்ளக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
லாக்கப் மரணங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி,லாக்கப் மரணங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி," அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மேலும் கொடுமையான செயலை இந்தியாவின் மீது திணிக்கிறது. நான்கு ஆண்டுகளில் இளைஞர்களை ராணுவத்தில் இருந்து என்ன செய்ய முடியும்.

கே.எஸ்.அழகிரி கண்டனம்
மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது. மக்களின் வரிப்பணத்தில் இதற்கு அனுமதி உண்டா?இல்லையா? என்பதுதான் கேள்வி என்றார். ராணுவ வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளது. பல ஆண்டுகளாக அது நடைமுறையில் உள்ளது.பாஜகவின் தற்போது நடைபெறும் ஆட்சிக்கு பிறகு, தேர்தல் வாக்குச்சாவடியில் ஆயுதங்களை ஏந்திய இளைஞர்களை நிறுத்த திட்டம் வைத்துள்ளனர்.

அக்னிபாத் திட்டம்
இது நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் வருகை 27ஆம் தேதி தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது சர்வாதிகாரத்துக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் எனவும் கூறியுள்ளார். இதற்கு நாட்டு மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. பல்வேறு நாடுகளில் ஹிட்லர், முசோலினி உள்ளிட்ட சர்வாதிகாரிகள் போன்று, அதுவே தான் இந்தியாவில் நடைபெறுகிறது.மக்களிடையே வேறுபாடு ஏற்படுத்துவதற்காக நடைபெறுகிறது.

முதல்வர் ஸ்டாலின்
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவைகளில் ஓராண்டிற்குள் இவ்வளவு தான் செய்ய முடியும்.ஒரு ஆண்டிற்குள் அனைத்து செய்ய முடியாது.திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதில் பெரும்பாலானவை நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ளவை நிறைவேற்ற முயற்சி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கூறினால் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். மற்றும் லாக்கப் மரணங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் லாக்கப் மரணங்கள் இல்லாமல் காவல்துறையினரும் பார்த்துக் கொள்ள வேண்டும்

அதிமுக விவகாரம்
உட்கட்சி கூட்டங்களில் சிறந்த ஜனநாயகம் இருக்க வேண்டும், அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் நுழைய விரும்பவில்லை. ஓபிஎஸ்,இபிஎஸ் அவர் சிறந்த நண்பராக இருந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாகரீகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இதை வேறு விதமாக தீர்த்துக் கொள்ளக் கூடாது. அதிமுகவில் நடைபெற்றது வருத்தத்திற்கு உரியது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications