ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்கிய தமிழ்நாடு அரசு.. என்னென்ன தெரியுமா?.. முழு லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 19-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்து துறை நிபுணர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்து முதல்வர் மு.க .ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

கூட்டங்களுக்கு தடை
நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தியேட்டர்கள், அனைத்து மதுக்கூடங்கள் இயங்க தடை தொடர்கிறது என்வும் நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

போக்குவரத்து தடை
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு போக்குவரத்துக்கான தடை தொடரும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இவை தவிர கூடுதலாக சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. அவற்றை கீழே காண்போம்.

இவற்றுக்கு அனுமதி
தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அனுமதி
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications