தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மகேஷ்குமார் அகர்வால் உள்பட யார் யாருக்கு என்ன பொறுப்பு
சென்னை: தமிழகத்தில் 15 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக ஆர். தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேய முக்கிய காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்கான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் பிறப்பித்துள்ளார்.
அதன்படி டிஜிபி பிரதீப் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். தற்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஏடிஜிபி ஜெயந்த் முரளியும் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்தார். தற்போது அவர் சென்னை ஆயுதப்படையின் கூடுதல் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபேஷ்குமார்
சென்னை மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை தென்மண்டல ஏடிஜிபியாக இருந்த அபேஷ்குமார், சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர் தினகரன்
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி ஜெயராம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆர். தினகரன், பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகநாதன் ஐபிஎஸ் சென்னை ஆயுதப்படையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ப மூர்த்தி
சென்னையில் உளவுத்துறை டிஐஜியாக இருந்த ராஜேந்திரன் தற்போது சென்னையில் தொழில்நுட்ப பிரிவின் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ப. மூர்த்தி, இப்போது சேலம் நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பி அருளரசு
கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி எஸ். செந்தில், தூத்துக்குடி மாவட்டம் பேராவூரணியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. அருளரசு, சென்னையில் டிஜிபி அலுலவகத்தில் சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.பி. பி. சரவணன்,
மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.எஸ். மகேஸ்வரன் மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் எஸ்.பி. பி. சரவணன், சென்னை டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் உதவி ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ்குமார்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. சி.ராஜா, தற்போது வணிக குற்றங்கள் தொடர்பான சிஐடி பிரிவின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எஸ்.பி. டிபி சுரேஷ்குமார், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications