செஸ் ஒலிம்பியாட்.. இது நம்ம சென்னை, நம்ம செஸ்.. ஆவின் மூலம் மக்களுக்கு அழைப்பு!
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில், ஆவின் பாக்கெட்டுகளில் செய்யப்பட்டுள்ள விளம்பரம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக சர்வதேச வீரர்கள் சென்னை வரத் தொடங்கியுள்ளனர்.

விழாக்கோலம்
இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. செஸ் விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களுக்கு வண்ணம் தீட்டுவது, பேனர்கள், தீம் பாடல், செல்ஃபி பாய்ண்ட், பேருந்துகள் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாணவர்கள் இடையே செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆவினில் விளம்பரம்
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ள அடையாள சின்னமான தம்பி சிலை நகரின் முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட்டு மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மக்களின் வீட்டிற்கும் சென்று செஸ் ஒலிம்பியாட்டை கொண்டாட அழைக்கும் வகையில், ஆவின் நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

நம்ம செஸ்
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஆவின் பால் பாக்கெட்டுகளில், இது நம்ம செஸ், நம்ம சென்னை என்று வாசகத்துடன் தம்பி சிலை வணக்கம் கூறி மக்களை அழைப்பது போல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கனவே செஸ் ஒலிம்பியாட் ஜோதி, தமிழ்நாடு வந்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் நினைக்க முடியாத பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று மக்களிடையே விளம்பரம் செய்து வருகிறது.
Recommended Video

அனைவருக்கும் அழைப்பு
அதேபோல் நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளதால், பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் செஸ் ஒலிம்பியாட் தொடர் சர்வதேச அளவில் தமிழ்நாட்டுக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications