சென்னைக்கு மிக அருகே..நடுக்கடலில் மாண்டஸ்! காத்திருக்கும் சவால்கள்! மக்களே மறந்தும் இதை செய்யாதீங்க!
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், சென்னை மாமல்லபுரத்தில் கரையை இன்று இரவு அல்லது அதிகாலையில் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொதுமக்கள் புயலின் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
தென்கிழக்கு வங்க கடலில் கலந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது மாண்டஸ் புயலாக வலுவடைந்து இருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கு சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கு 210 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் ஆனது மையம் கொண்டுள்ள நிலையில் மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயல்
வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வரும் நிலையில் இன்று இரவு புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ஏற்கனவே பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களிலும் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

பலத்த காற்று
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 75 கிலோமீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசப்படும் இடமும் வானிலை மையம் கணித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமானது வரை மழையும், அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரத்திற்கு வாய்ப்பு உள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

கடல் அரிப்பு
வானிலை ஆய்வு மையம் கணித்தது போல் மாண்டஸ் தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழந்திருக்கும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையிலிருந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் காலையை காட்டிலும் வேகமும் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் கரைகளில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெசன்ட் நகர் மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கடல் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் மழையும் பெய்து வருகிறது.

முன்னெச்சரிக்கை அறிவிப்புகள்
இந்நிலையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், பலத்த காற்று வீசும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications